சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கிடக்கட்டும்.. ஆயிரம் வாலா என்ன விலை கேளு.. தீவு திடலில் அலை மோதும் மக்கள்.. இதுதான் சென்னை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி விட்டனர் என்பது தீவுத் திடலை பார்த்தால் தெரிகிறது.

Recommended Video

    வியாபாரம் படு மோசம் | Unseen Crowdless T-NAGAR | Oneindia Tamil

    தீபாவளி பண்டிகைக்கு, புத்தாடை, பலகாரம் போலவே, பட்டாசு வெடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மக்கள் வாடிக்கை. சென்னையின் பட்டாசு விற்பனை கடல் என்று அழைக்கப்படுவது தீவுத்திடல் பகுதி. அங்கு மக்கள் கூட்டம் தற்போது அலைமோதி வருகிறது.

    Chennai people buying crackers eagerly in Theevu thidal

    இன்று காலை முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கு வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர். எனவே பட்டாசுகள் விற்பனையாகுமா என்று பயந்து போயிருந்த வியாபாரிகள் தற்போது நிம்மதி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    நேற்று மழை பெய்ததால், கூட்டம் குறைவாக இருந்ததால் வியாபாரிகளிடம் இயல்பாகவே பதட்டம் தொற்றிக்கொண்டது. ஆனால் நேற்றைக்கும் சேர்த்து வைத்து இன்றைக்கு பட்டாசு கடைகளில் கூட்டம் அலை மோதுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தீவுத்திடலில் கடந்த வருடம், 80 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக 40 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    பட்டாசு வெடிக்கும் நாட்களில் சானிட்டைசர் பயன்படுத்தாதீங்க.. தீ கைக்கு பரவி விடும்.. உஷார் மக்களே!பட்டாசு வெடிக்கும் நாட்களில் சானிட்டைசர் பயன்படுத்தாதீங்க.. தீ கைக்கு பரவி விடும்.. உஷார் மக்களே!

    மேலும், ஒவ்வொரு கடையிலும் இரண்டு வாளி தண்ணீர், மணல் மற்றும் தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. 4 தீயணைப்பு வாகனங்கள் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தீவு திடல் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தீவுத் திடலில் விற்பனை செய்யப்படும், 90 சதவீதம் பட்டாசுகள் பசுமை பட்டாசுகளாக உள்ளன. சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள்.

    சில பட்டாசுகளுக்கு விலையேற்றம் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் மக்கள் ஆர்வத்தோடு பட்டாசுகளை வாங்கிச் செல்கிறார்கள். வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாட தயாராகி விட்டனர் என்பதை தீவுத்திடல் நமக்கு கண்முன் காட்டுகிறது.

    English summary
    People started to rush towards the Theevu thidal area in Chennai where crackers stalls has been installed ahead of Deepawali.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X