சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கு நல்ல செய்தி .. இன்னும் சில நாளில் மாறப்போகிறது.. இனி ஹேப்பியா போகலாம்

Google Oneindia Tamil News

சென்னை : சென்னைவாசிகள் போக்குவரத்து நெரிசலால் ரொம்ப கஷ்டப்படுற ஏரியாக்களில் ஒன்று கோயம்பேடு. காரணம் மேம்பால பணிகள் தான். வடபழனி - கோயம்பேடு பணி முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில நாளில் இந்த பாலம் திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Recommended Video

    ஆளுநர் பதவியேற்பு விழா... 8 வது வரிசையில் சீட்... தனியாளாக அமர்ந்திருந்த இபிஎஸ்!

    சென்னை அற்புதமான போக்குவரத்து வசதிகள் உள்ள நகரம் என்றாலும், மிரள வைக்கும் வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தனைக்கும் மற்ற நகரங்களை போல் வெளிமாவட்ட பேருந்துகள் பெரும்பாலும் ஊருக்குள் வருவது இல்லை. தாம்பரம் கோயம்பேடு புறவழிச்சாலையில் தான் வருகின்றன.

    ஆனாலும் சென்னை நகரம் படாதபாடு படுகிறது. மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பறக்கும் ரயில், சிக்னலுக்கு சிக்னல் மேம்பாலம் இருந்து விடிவுகள் பிறக்கவில்லை.

    என் பெயரை யூஸ் பண்ண கூடாது.. சீறிய விஜய்.. அப்பா, அம்மாவிற்கு எதிராக வழக்கு.. நடந்தது என்ன? என் பெயரை யூஸ் பண்ண கூடாது.. சீறிய விஜய்.. அப்பா, அம்மாவிற்கு எதிராக வழக்கு.. நடந்தது என்ன?

    வடபழனி சந்திப்பு

    வடபழனி சந்திப்பு

    அந்த அளவிற்கு வாகன நெருக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு வடபழனி சந்திப்பில் வாகன பெருக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால் பேருந்துகள் உள்ளே இருந்து வெளியே வருவதும், வெளியே இருந்து உள்ளே செல்வது கடினமாக மாறி உள்ளது.

    போக்குவரத்து நெரிசல்

    போக்குவரத்து நெரிசல்

    குறிப்பாக தீபாவளி, ஆயுதபூஜை , பொங்கல், புத்தாண்டு உள்பட பண்டிகை காலங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது உண்மையிலேயே சவாலானது. பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தவிர இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் சரக்கு வாகனங்களும் ஏராளமான நகருக்குள் செல்வதால் திணறுகிறது.

    மேம்பாலம் பணி

    மேம்பாலம் பணி


    இதன் காரணமாக வடபழனி - கோயம்பேடு இடையே ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே 100 அடி சாலையில் ரூ.93.5 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. 1.3 கி.மீட்டர் தூரம் இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பால பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.

    போக்குவரத்து

    போக்குவரத்து

    இந்த பணிகள் காரணமாக திருமங்கலம், பாடி, அரும்பாக்கம் பகுதிகளில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் வாகனங்கள் கோயம்பேடு பஸ் நிலைய சிக்னலில் சிக்கி திணறுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது.
    விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.

    மேம்பாலம் தயார்

    மேம்பாலம் தயார்

    மேம்பாலம் கட்டும்பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா காரணமாக பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மெதுவாக நடந்தது.இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் பணிகள் வேகமெடுத்தன. இறுதிகட்ட பணிகளும் முடிந்துள்ளன. இதையடுத்து போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம் தயாராகிவிட்டது. இன்னும் சில நாளில் மேம்பாலத்தை எப்போது திறப்பது என அதிகாரிகள் அரசுக்கு தெரிவிப்பார்கள்.அதன்பிறகு மேம்பாலம் திறக்கப்படும். அனேகமாக இந்த மாத இறுதிக்குள் மேம்பாலம் திறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    மக்கள் மகிழ்ச்சி

    மக்கள் மகிழ்ச்சி

    ஏனெனில் வடபழனி - கோயம்பேடு இடையே ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த மேம்பாலம் திறப்பதுமட்டுமே சிறந்த வழியாகும். அதேபோல் விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் சந்திப்பில் ஏற்படுகின்ற நெரிசலையும் இந்த பாலத்தை திறப்பதால் குறைக்க முடியும் . புதிய மேம்பாலத்தை திறக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறுதிகட்ட பணிகளை இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பாலம் திறக்கப்பட்டால் 100 அடிசாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் நெரிசலில் சிக்காமல் வந்து செல்ல முடியும். இதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக பயணிக்கலாம்.

    English summary
    koyambedu is one of the most troubled areas in Chennai due to traffic congestion. The reason is flyover tasks. Vadapalani - koyambedu is on the verge of completion. It has been reported that the bridge may open in a few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X