சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவைவிட என்பிஆர் ஆபத்தானது.. அறிவித்த தவ்ஹீத் ஜமாத்அத்.. சென்னையில் மாபெரும் பேரணி, போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவேயும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இஸ்லாமியர்கள் இணைந்து சிஏஏ உள்ளிட்டவற்றுக்கு எதிராக, சென்னையில் இன்று போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் அமைப்பினர் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Chennai: People including Tamil Nadu Thowheed Jamath members continue their protest against CAA

அவர்கள் போராட்டம் 32வது நாளை எட்டிய நிலையில், கொரோனா வைரஸ் பரவி வருவதை காரணமாகச் சொல்லி, போராட்டத்தை ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜாமொய்தீன் பாகவி இந்த கோரிக்கையை வைத்தார்.

எனவே, வண்ணாரப்பேட்டையில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வைரஸ் பரவுவதை தடுக்க போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்தது. ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதை ஏற்கவில்லை.

Chennai: People including Tamil Nadu Thowheed Jamath members continue their protest against CAA

கொரோனாவை விட NPR ஆபத்தானது! இறைவன் விரும்பினால், ஜெயில் நிரப்பும் போராட்டம் 2020 மார்ச் 18 புதன்கிழமை திட்டமிட்டபடி நடக்கும் என்று,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்தான், இன்று சென்னை ஹைகோர்ட் அருகே நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் பேரணி நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

English summary
Chennai: People including Tamil Nadu Thowheed Jamath members continue their protest against CAA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X