சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது வருஷத்தை பத்தி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்.. என்னம்மா பீல் பன்றாங்க பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா! - வீடியோ

    சென்னை: புத்தாண்டு பிறந்துவிட்டது. ஒவ்வொருவரும் இந்த வருஷம் ஏதாவது நல்ல விஷயம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

    உதாரணத்திற்கு புகைபிடிப்பதை நிறுத்துவது, குடிப்பதை நிறுத்துவது. ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்ப்பது, புதிய ஆடைகளை வாங்கி குவிக்காமல் இருப்பது, வீண் செலவை குறைத்தல், நல்ல தொழில் தொடங்க வேண்டும் உள்பட ஏதாவது நமக்கு பிரயோஜனமான விஷயங்களை செய்ய நினைப்போம். ஆனால் உண்மையில் நடைமுறையில் இதில் பல சாத்தியப்படாமல் போய்விடும்.

    இந்நிலையில் நம்மை போல் பொதுமக்கள் இந்த ஆண்டு செய்ய நினைத்த விஷங்களை அவர்கள் வாயாலேயே இப்போது கேட்போம்.

    தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா! தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா!

    குறைக்கணும்

    குறைக்கணும்

    கஜேந்திரன் என்பவரிடம் நாம் கேட்ட போது, அவர் போன வருசம் வரைக்கும் நிறைய கஷ்டப்பட்டதாக கூறினார். அவர் அப்படி கஷ்டப்பட்டதுக்கு காரணமான ஒரு விஷயத்தை இந்த வருடம் விடுவது என்றால் எதை விடுவீர்கள் என்று கேட்டோம். அதற்கு கஜேந்திரன் இது வரை வீண் செலவு செய்தேன். இந்த வருசம் அதை குறைக்க விரும்புகிறேன், இதன் மூலம் என் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமித்து நல்ல வழியை காண்பிக்க விரும்புகிறேன் என்றார்.

    புதிய கடை

    புதிய கடை

    ஓட்டல் கடை நடத்தும் அண்ணாச்சி ஒருவரிடம் கேட்ட போது, இப்போது இல்லாமல் புதிதாக தான் கடை ஒன்றை ஆரம்பித்து உள்ளதாக கூறினார். வங்கி ஏடிஎம்களில் செக்யூரிட்டியாக உள்ள ஒருவர் கூறுகையில், கையில் 4 சவரனில் பிரேஸ்லெட் போட ஆசை என்றார்.

    வயதான பெண்மணி

    வயதான பெண்மணி

    ஒரு வயதான பெண் மணியிடம் கேட்ட போது இந்த வருடம் போல் அடுத்த வருடமும் நல்ல மகிழ்ச்சியும் வளமும் இறைவன் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார். ஒரு இளைஞர் தான் இந்த வருசமாவது நல்லவனாக இருக்கணும் என்றார்.

    வேகமாக எழுதல்

    வேகமாக எழுதல்

    ஆட்டோ டிரைவர் ஒருவர் தான் இந்த ஆண்டு முதல் குடிப்பழக்கத்தை நிறுத்தப்போவதாக கூறினார். அப்படியே நாம் கேள்வி கேட்டவர்களை எல்லாம் மீண்டும் ஒரு ரவுண்டு அடித்து கேட்டால் வீடு கட்டணும் என்கிறார். வயதான பெண் தன் பிள்ளைக்காக எதுவும் செய்வேன் என்றார். பிரேஸ்லெட்டை விரும்பியவர், தனக்காக புகைப்பிடிப்பதை விடப்போவதாக சொன்னார். ஆட்டோ ஓட்டுநர் தனக்கு பின்னாள் யாரும் இல்லாததால் முயற்சிகள் செய்வதற்கு பலன் இல்லை என்கிறார். இளைஞரிடம் கேட்ட போது கஷ்டப்பட்டு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும், முதல் பீரியடில் காலேஜ்க்கு போயிடனும் என்கிறார். நல்ல ஆட்சி வரணும் என்கிறார்.

    English summary
    new year 2020: peoples feelings in 2020, peoples reply what will achieve this year
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X