சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் வறட்சி... தவிக்கும் தலைநகர் மக்கள்... தண்ணீருக்காக காத்திருப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    குடிநீருக்காக காத்திருக்கும் சென்னை மக்கள்

    சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, சுற்றுவட்டார பகுதிகளில் நீர்வளம் மிக்க 300 க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளை கண்டறிந்து, சென்னைக்கு குடிநீர் எடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.

    பொய்த்து போன மழை . வறண்டு போன நீர்நிலைகள். சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை.. இதனால் இந்த ஆண்டு சென்னை வாசிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Chennai peoples waiting for Drinking water, Sembarambakkam and Sholavaram lakes are dry

    சென்னை நகருக்கு குடிநீர் வழங்கி வந்த செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் முற்றிலும் வற்றி வறண்டுவிட்ட நிலையில், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கல்குவாரி நீர் நிலைகளை கண்டறிந்தது, சுத்திகரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    பாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்! பாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

    தண்ணீர் பிரச்சனை அரசியல் பிரச்சனையாகவும் மாறியுள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி, மாறி புகார்களை முன்வைத்து வருகின்றனர். சென்னையில் தினமும் 9,000 முறை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. விளம்பரத்திற்காக சில இடங்களில் அரசியல் கட்சியினர் குடிநீர் விநியோகிக்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார்.

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினாலே போதும், தண்ணீர் பஞ்சம் வந்து இருக்காது என்று திமுக எம்.பி. கனிமொழி தடாலடியாக பேசியுள்ளார். இந்த நேரத்தில், ஒன்றாக செயல்பட்டு தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தவிர, முட்டிக்கொள்ள கூடாது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் தீயணைப்பு நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அபராதமும் வசூலிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில், சென்னை அடுத்த பல்லாவரம் ஈஸ்வரி நகர் புதுக்குடியிருப்பு பகுதியில், குலுக்கல் முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 3 குடங்கள் என வீதத்தில், தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

    ஆங்கிலேயர் காலத்தில், நீராவி ரயில் இன்ஜின்களில் நீர் நிரப்புவதற்காக தோண்டப்பட்ட கிணறு. தற்போது, 100 குடும்பங்களுக்கு மேல் குடிநீர் ஆதாரமாக உள்ளது. பஞ்சத்திலும் , தண்ணீர் கொடுத்து காத்து வருகிறது. இருப்பினும், லாரி மூலம் தண்ணீர் வழங்க அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாத பட்ஜெட்டில், தண்ணீருக்கான செலவு, தண்ணீராக ஓடுகிறது என்கின்றனர் சென்னை மக்கள்.

    English summary
    The lakes are dry: Chennai peoples waiting for Drinking water
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X