• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

காதலி கங்காவும்.. சுரேஷின் மீசையும்.. செம ஸ்கெட்ச்.. அசால்ட்டாக தூக்கிய சென்னை போலீஸ்!

|

சென்னை: ஒரு பலே கொள்ளையனை பிடிக்க, அவரது மீசையே காரணமாக அமைந்த கதைதான் சென்னையில் நடந்துள்ளது!

கொள்ளையன் பெயர் மார்க்கெட் சுரேஷ்.. சென்னையில் பல இடங்களில் கைவரிசையை காட்டி உள்ளார்.. நிறைய முறை கைதாகி ஜெயிலுக்கும் போனவர். கடந்த 21-ம் தேதி இரண்டரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளியும் திநகரில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளை போனது.

Chennai Police arrested T Nagar Jewellery theft robbers

இது சம்பந்தமாக புகார் சென்றதை அடுத்து போலீசாரும் துப்பு துலக்க ஆரம்பித்தனர்.. அங்கிருந்த சிசிடிவியின் உதவி கொண்டு ஒரு கும்பலை கைது செய்து, ஒன்றரை கிலோ நகை, 11 கிலோ வெள்ளியையும் மீட்டுவிட்டனர். இந்த கும்பலை பிடிப்பதில் தனிப்படை போலீசார் மிக சாமர்த்தியாக பணியாற்றினர்.

இந்நிலையில், தென்மண்டல காவல் கூடுதல் ஆணையர் தினகரன், தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் அளித்தார்.. இதற்கு பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியபோது, அந்த கொள்ளை கும்பலுக்கே தலைவன் மார்க்கெட் சுரேஷ் பற்றி சுவாரஸ்யமான தகவலை சொன்னார்.

வழக்கமாக மார்க்கெட் சுரேஷ், திருடும்போது தொப்பிபோட்டு தான் திருடுவாராம்.. முகத்தில் மாஸ்க், கையில் கிளவுஸ் என கொஞ்சம்கூட முகமே தெரியாமல்தான் காரியங்களை கச்சிதமாக முடித்து வந்துள்ளார்.. அதனால் இவரை அவ்வளவு எளிதாக பல கொள்ளைகளில் பிடிக்க முடியவில்லை.. கைரேகையும் பதிவாகவில்லை.. அப்படித்தான் திநகர் கொள்ளையிலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

அதனால் மறுபடியும் அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்களாம்.. அப்போது ஒரு இடத்தில், அலமாரியில் இருந்து பிளாஸ்டிக் பையில் உள்ள நகையை சுரேஷ் எடுக்க முயன்றுள்ளார்.. அந்த பிளாஸ்டிக் பையை திறக்க முடியவில்லை.. அதனால், தன்னுடைய மாஸ்க்கை கொஞ்சமாக கீழே இழுத்துவிட்டு, வாயால் அந்த பையை கடித்து இழுத்தார்.

லைட்டாக அந்த மாஸ்க் கீழே இறக்கும்போதுதான், சுரேஷின் மீசை தென்பட்டது.. அவர் மீசை பயங்கர அடர்த்தியாக இருந்துள்ளது.. அந்த அடர்த்தி மீசையையே ஒரு துப்பாக வைத்து கொண்டு, பழைய குற்றவாளிகளில் யாருக்கெல்லாம் அடர்த்தி மீசை இருக்கிறது என்று போலீசார் ஆராய்ந்தனர்.. மேலும் பல சிசிடிவி காட்சிகளிலும் பதிவான திருடர்களின் மீசைகளையும் ஒப்பிட்டு பார்த்தனர்.. அப்படி ஒத்துப்போனதுதான் மார்க்கெட் சுரேஷின் மீசை. அதன்பிறகுதான் சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சுரேஷுக்கு கங்கா என்ற பெண் தோழி உள்ளார்.. 2 பேரும் சேர்ந்துதான் திருடுவார்களாம்.. 2 பேருமே ஜெயிலுக்கு போய் வந்துள்ளனர்.. இதற்கு பிறகு, திருவள்ளூரில் பதுங்கி கிடந்த கங்காவை பிடித்து போலீசார் விசாரித்தனர்.. அப்போதுதான்தான் திநகரில் கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை கங்காவுக்கு சுரேஷ் தந்தது தெரிந்தது.. அந்த நகையை கங்கா, அவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் புதைத்து வைக்க, அதையும் போலீசார் மீட்டனர்.

ஆர்.கே.நகருக்கு குட்-பை சொல்லும் டிடிவி தினகரன்... தொகுதியை வலம் வரும் சற்குணப்பாண்டியன் மருமகள்..! ஆர்.கே.நகருக்கு குட்-பை சொல்லும் டிடிவி தினகரன்... தொகுதியை வலம் வரும் சற்குணப்பாண்டியன் மருமகள்..!

இப்போது கங்காவிடம் தீவிரமான விசாரணை நடந்தது.. அதன்படியே சிக்கியவர்தான் அப்பு என்கிற வெங்கடேசன்.. திருவண்ணாமலையை சேர்ந்தவர்.. இப்படிதான் ஒவ்வொருவராக சிக்கினர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார். அந்த நகைக்கடையில் சரியான பாதுகாப்பு இல்லையாம்.. இவ்வளவு நகைகளையும் ஒரே ஒரு குச்சியை வைத்து கொண்டுதான் கொள்ளை அடித்துள்ளார் சுரேஷ்.

இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், என்னைக்காவது போலீஸ் தன்னை கைது செய்துவிட்டால், ஜாமீனில் வந்து வெளியே எடுக்க வேண்டும் என்று, திருடிய நகையில் ஒரு வைரக்கம்மலை வக்கீல் ஒருவரிடம் முன்கூட்டியே தந்துள்ளாராம் மார்க்கெட் சுரேஷ்.. அந்த வக்கீலையும் பிடித்து வைரக்கம்மலையும் மீட்டுள்ளனர்.. இன்னும் பலர் சிக்கி உள்ளதால், விசாரணை நடந்து வருகிறது.

English summary
Chennai Police arrested T Nagar Jewellery theft robbers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X