சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டுடே ஈஸ் மை லாஸ்ட் டே".. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு போலீஸ்காரர் தற்கொலை.. சென்னை ஷாக்!

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: "டுடே ஈஸ் மை லாஸ்ட் டே" என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு விஷம் குடித்துவிட்டார் போலீஸ்காரர் ஒருவர்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை பெரம்பூர் செம்பியம் போலீஸ் குவார்ட்டஸை சேர்ந்தவர் ஜோசப்.. 37 வயதாகிறது.. புது வண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். கல்யாணமாகி ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 chennai police head constable commits suicide due to family issue

கடந்த மே மாதம் 22-ம் தேதியில் இருந்தே ஜோசப் மெடிக்கல் லீவு போட்டிருந்தார்.. அதனால் ஆபீசுக்கு வரவில்லை.. இந்நிலையில் 4 நாளைக்கு முன்பு குடும்பத்தில் தகராறு வந்துள்ளது.. இவருடன் சண்டை போட்டு கொண்டு மனைவி கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ஜோசப் 17-ம் தேதி விஷம் குடித்துள்ளார். தகவலறிந்த குடும்பத்தினர் பதறி ஓடினர்.. ஜோசப்பை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தும் பலனில்லை.. உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

"அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்.." லெட்டர் எழுதி வைத்து தூக்கில் தொங்கிய மாணவி

இதுகுறித்து செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு 4 மணி நேரத்துக்கு முன்புதான், "டுடே ஈஸ் மை லாஸ்ட் டே" என்று வாட்ஸ்அப்பில் ஜோசப் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்.. இந்த ஸ்டேட்டஸ் பார்த்துதான் குடும்பத்தினருக்கே விஷயம் தெரிந்துள்ளது.

4 மணி நேரம் முன்பு என்றால், தற்கொலை முடிவை முன்னதாகவே ஜோசப் எடுத்துள்ளதாக தெரிகிறது.. 2003ல் இருந்து போலீசாக வேலை பார்த்து வருகிறாராம்.. மனைவியுடன் என்ன தகராறு என்று தெரியவில்லை.. நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

English summary
chennai police head constable commits suicide due to family issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X