சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜான் சரியா பால் குடிக்கலை.. அழுதுட்டே இருந்தான்.. ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த ரேவதி.. மடக்கிய போலீஸ்!

காணாமல் போன குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்திய பெண் - வீடியோ

    சென்னை: "எனக்கு ரெண்டுமே பொண்ணுங்க.. 3-வதா ஒரு ஆண் குழந்தை வேணும்னு என் மாமியார் கேட்டுக்கிட்டே இருந்தாங்க.. அதனாலதான் ஜானை கடத்தினேன்.. ஆனா, கடத்தி வந்ததில் இருந்தே அவன் சரியா பால் குடிக்கல.. அழுதுட்டே இருந்தான்.. அதனாலதான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்தேன்" என்று 7 மாத ஆண் குழந்தையை கடத்திய ரேவதி போலீசில் தெரிவித்துள்ளார்.. எனினும் இந்த 8 நாட்களாக, 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, குழந்தையை கடத்திய ரேவதியை, சென்னை போலீசார் மடக்கி பிடித்து சபாஷ்களை அள்ளி வருகின்றனர்!

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதி ஜானி போஸ்லே - ரந்தேஷா போஸ்லே.. இவர்களது 7 மாத ஆண் குழந்தை ஜான்.. ரந்தேஷாவுக்கு 20 வயதாகிறது.. மாமியார் அர்ச்சனாவுடன் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்துள்ளனர்.. சென்னை மெரினா பீச்சில் கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடற்கரை மணலில் வசித்து வருகிறார்கள்... காந்தி சிலை பின்புறத்தில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த 12-ம் தேதி இரவு 11.30 மணியளவில், 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், தாய் ரந்தேஷா போஸ்லாவிடம் வலிய வந்து பேச்சு தந்தார். "நாங்க ஒரு சினிமா படம் எடுக்கிறோம்.. அதில் நடிக்க ஒரு ஆண் குழந்தை தேவைப்படுகிறது. நிறைய பணம் கிடைக்கும்" என்று ஆசைவார்த்தை சொல்லி உள்ளார்.

    பெற்றோர்

    பெற்றோர்

    பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பெற்றோர் இதற்கு சம்மதித்தனர்.. ரன்தீசாவையும், மாமியார் அர்ச்சனாவையும் அழைத்து கொண்டு, அந்த இளம்பெண் ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கும், பிறகு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். "குழந்தையை முதலில் டாக்டரிடம் காட்டிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, ஜானை தூக்கி கொண்டு போனவர் திரும்பி வரவே இல்லை.

    சிசிடிவி

    சிசிடிவி

    இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் அம்மாவும் பாட்டியும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் ஷ்டேஷனில் புகார் செய்தனர். போலீஸாரும் விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, இளம்பெண் குழந்தையை கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. மற்றொரு சிசிடிவியில், குழந்தையைக் கடத்திய பெண் ஒரு ஆட்டோவில் ஏறி எழும்பூர் பிரிட்ஜ் அருகே இறங்குவதும், பின்னர் அங்கிருந்து நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது. பெண் உள்ளூரில்தான் இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டதே தவிர, அந்த பெண்ணை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    அதனால், கடத்தல் பெண்ணின் போட்டோ, அடையாளங்கள், கடத்தல் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டு, குழந்தையை மீட்க பொதுமக்களின் ஒத்துழைப்பையும், உதவியையும் கேட்டிருந்தனர். தொடர்ந்து குழந்தையை பத்திரமாக மீட்கவும் கடுமையான முயற்சிகளை விடாமல் மேற்கொண்டனர். இதற்காக மட்டும் 25 சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    விசாரணை

    விசாரணை

    அதன்படி சம்பந்தப்பட்ட பெண் எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் ரேவதி, வயது 26 என்பது தெரியவந்தது.. அரக்கோணத்தை சேர்ந்தவராம்.. கணவன் பெயர் இளங்கோவன்!

    மாமியார்

    மாமியார்

    ரேவதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை பிறந்திருக்கிறது.. 3-வது ஆண் குழந்தை வேண்டும் என்று மாமியார் தொல்லை பண்ணி கொண்டே இருந்ததால், ஜானை கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், கடத்தி கொண்டு போனதும் ஜானுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாம்.. குழந்தை பாலும் குடிக்காமல் அழுது கொண்டே இருந்திருக்கிறான்.. அதனால்தான் எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் குழந்தையை கொண்டு வந்து அனுமதித்துள்ளார்.

    சபாஷ் போலீஸ்

    சபாஷ் போலீஸ்

    இந்த ஆஸ்பத்திரியில் ரேவதி சுற்றிக் கொண்டிருப்பதை, ஒரு நர்ஸ் பார்த்துவிட்டு, போலீசுக்கு தகவல் சொல்லவும்தான், விரைந்து வந்து குழந்தையை மீட்க முடிந்திருக்கிறது. குழந்தையை கண்டுபிடிக்க, இந்த 8 நாளும் சென்னை போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியது.. ஜானை கொண்டு போய் பத்திரமாக ஒப்படைத்த பிறகுதான், அந்த வடமாநில பெற்றோர்கள் முகத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறந்தது.. நமக்கும்தான்!

    English summary
    7 month old baby kidnapped in chennai marina and police rescued the baby in egmore gov hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X