• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மேனகாவின் "லீலைகள்".. அப்பாவுடன் சேர்ந்து கணவர், மச்சினன், மாமனார்.. அடேங்கப்பா பெண்!

|

சென்னை: கணவரின் குடும்ப சொத்துக்காக, தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து மாமனார், கணவரை, கணவரின் தம்பி ஆகிய 3 பேரையும் அடித்து கொன்றுள்ளார் மேனகா என்ற பெண்.. இவருக்கு கார் டிரைவருடன் கள்ளக்காதலும் இருந்துள்ளது.. அதுமட்டுமில்லை, சொந்த மாமியாரையே ஆள் வைத்து கடத்தியவர்.. இப்படி கொலை, ஆள்கடத்தல், கள்ளக்காதல் என அனைத்தும் கலந்த திகில் கலவைதான் மேனகா என்ற சீரியல் கில்லர்!

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி. 70 வயதான இவருக்கு, செந்தில், ராஜு என, 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் கல்யாணமாகி தனித்தனியே படப்பையில் வசித்து வந்தனர். ஆனால், சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்தது.

Chennai Police searched for Serial Killer Menaka

மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவிதான் பத்மினி. இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. மூத்த மகன் செந்தில்குமார் பில்டிங் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்..

இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும் சுப்பராயன் அப்போது சொத்துக்களை பாகம் பிரித்து தந்துள்ளார்.. இதில், ராஜ்குமாருக்கு கொஞ்சம் கூடுதலாக சொத்துக்களை தந்துவிட்டார்.. அதனால் செந்தில்குமாரும் அவரது மனைவி மேனகாவும் ஷாக் அடைந்தனர்.

உடனே தன்னுடைய கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் என்பவருடன் சேர்ந்து சொந்த தம்பியையே கொலை செய்தார் அண்ணன் ராஜ்குமார். இதற்கு மேனகாதான் மூளையாக இருந்துள்ளார். இந்த கொலை வழக்கில் செந்தில்குமார் ஜெயிலுக்கு போய்விட்டார்.. இந்த சமயத்தில் மேனகாவுக்கு இன்னும் ஜாலியாகிவிட்டது.. கார் டிரைவர் ராஜேஷ் கண்ணாவுடன் கள்ள உறவு தொடர்ந்தது.

தண்டனை முடிந்து வெளியே வந்த செந்தில்குமார், மேகனாவின் செயலை கண்டு அதிரந்து போனார்.. கள்ளக்காதலுக்கு கணவன் தடையாக வந்ததால், கணவனையும் கார் டிரைவருடன் சேர்ந்து கொலை செய்ய பிளான் செய்தார். அதன்படி கடந்து 2018, பிப்ரவரி மாதம் செந்தில்குமாரை ஏமாற்றி செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி அருகில் உள்ள பசுமலை தாங்கல் என்ற இடத்துக்கு வரவழைத்து கொலை செய்து, அங்கேயே புதைத்தனர்.

கிரைம் மினிஸ்டர்.. இஸ்ரேலில் மக்கள் புரட்சி.. நெதன்யாகு பதவி விலக கோரி.. பல்லாயிரம் பேர் போராட்டம்

ஆனால் மாமனார் இருக்கும்வரை சொத்து கிடைக்காது என்று புருஷனை கொன்ற பிறகுதான் தெரிந்தது.. அதனால், மாமனாரையும் கொல்ல முடிவு செய்தார் மேனகா.. அதன்படி, கள்ளக்காதலன், தன்னுடைய அப்பா அருணுடன் சேர்ந்து மாமனாரையும் கொன்று புதைத்தார்.. இந்த கொலை செய்த பிறகுதான் தெரிந்தது, மாமியார்தான் பத்மினியை கடத்தினால் சொத்து கிடைக்கும் என்று நினைத்து, கடந்த 2018-ல் அவரை கடத்தி சென்றார்... ஆனால் சிசிடிவி கேமரா உதவியுடன் அயனாவரம் போலீசார் நடவடிக்கை எடுத்து பத்மினியை மீட்டனர்.

அப்போதுதான், பத்மினி தனது மகன் காணவில்லை என்று ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போதுதான் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணா சிக்கினார்.. கொலைகளை மேனகாவுடன் சேர்ந்து செய்ததை ஒப்புக் கொண்டார்.. புதைக்கப்பட்ட செந்தில்குமாரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த கொலைக்கு உதவியாக இருந்த ஹரிகிருஷ்ணன், அன்பு, உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. இதில் மேனகாவின் அப்பா அருண் சிறையில் இருந்து வந்துவிட, ராஜேஷ்கண்ணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.. ஆனால் எல்லா கொலைகளுக்கும் காரணமான சீரியல் கில்லர் மேனகாவை காணோம்.. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்ட்டுள்ளதாம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai Police searched for Serial Killer Menaka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X