சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 ஆக பிரிக்கப்பட்ட சென்னை காவல்துறை: ஆவடி, தாம்பரத்திற்கு இவர்கள் தான் சிறப்பு அதிகாரிகளா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை காவல்துறை 3ஆக பிரிக்கப்படுவதாக என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட காவல் ஆணையகரங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு ஏடிஜிபி அந்தஸ்த்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காவல் ஆணையராகமாக சென்னை உள்ளது. பெரிய ஆணையரகம் என்பதால் நிர்வாக ரீதியாக பணிகளை மேற்கொள்வது காவல்துறைக்கும் அரசுக்கும் கடினமாக இருந்தது. சென்னைக்கு கீழ் பல்வேறு காவல் மாவட்டங்கள் இருப்பதாலும், புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு மாநகராட்சிகள் இருப்பதாலும் நிறைய நிர்வாக சிக்கல் இருந்தது.

இதனால் திமுக ஆட்சிக்கு வந்ததுமே சென்னை காவல்துறை 2 ஆக பிரிக்கப்படும், அல்லது 3 ஆக பிரிக்கப்படும் என்றெல்லாம் தகவல்கள் பரவி வந்தது. சென்னை காவல்துறை பிரிக்க வேண்டும் என்று 2008லேயே திமுக முயன்று வந்தது. 2011ல் அதிமுக சார்பாக ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 2008 இதற்காக சென்னை புறநகர் காவல்துறை ஆணையரகம் உருவாக்கப்பட்டது.

3 மேட்டர்கள்.. 13 திமுக அமைச்சர்கள்.. அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி.. 3 மேட்டர்கள்.. 13 திமுக அமைச்சர்கள்.. அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி..

கடினம்

கடினம்

ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் சென்னை காவல்துறையை ஒரே ஆணையரகமாக மீண்டும் மாற்றி அமைத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் சென்னை காவல்துறை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படியே கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கையில் சென்னை காவல்துறை 3ஆக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது.

மூன்று காவல் ஆணையரகம்

மூன்று காவல் ஆணையரகம்

நிர்வாக வசதிக்காகவும், தாம்பரம் போன்ற புதிய மாநகராட்சிகளில் சிறப்பான காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று மொத்தம் மூன்று காவல் ஆணையகரகங்கள் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட காவல் ஆணையகரங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டங்கள் பிரிப்பு

மாவட்டங்கள் பிரிப்பு

ஏற்கெனவே 12 காவல் மாவட்டங்கள் இருந்த நிலையில் கூடுதலாக தாம்பரம், பூவிருந்தவல்லி, உருவாக்கப்பட்டு 14 ஆக மாற்றப்படும் என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக அடையாறு காவல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து துரைப்பாக்கம் காவல் மாவட்டம் என உருவாக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்டதால் காவல் மாவட்டங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்த நிலையில் சென்னைக்கு 9 காவல் மாவட்டங்கள் (ஏர்போர்ட்டும் சென்னை காவல் எல்லைக்குள் வரும்) , தாம்பரத்திற்கு 3 காவல் மாவட்டங்கள், ஆவடிக்கு 3 காவல் மாவட்டங்கள் என பிரிக்க முடிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்டதால் காவல் மாவட்டங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்த நிலையில் சென்னைக்கு 9 காவல் மாவட்டங்கள் (ஏர்போர்ட்டும் சென்னை காவல் எல்லைக்குள் வரும்) , தாம்பரத்திற்கு 3 காவல் மாவட்டங்கள், ஆவடிக்கு 3 காவல் மாவட்டங்கள் என பிரிக்க முடிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் யார்?

அதிகாரிகள் யார்?

இவ்வாறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், அதற்கான உரிய நடைமுறைகள், அரசாணை வெளியாகாததாலும், அடுத்தக்கட்ட நகர்வுக்காகவும் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு இரண்டு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சிறப்பு அலுவலர்களாக நியமிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதனுடன் ஏடிஜிபிக்கள், புதிய டிஜிபிக்களுக்கான மாறுதல் உத்தரவும் வர வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது.

அதன்படி ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சிறப்பு அலுவலர்களாக நியமிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதனுடன் ஏடிஜிபிக்கள், புதிய டிஜிபிக்களுக்கான மாறுதல் உத்தரவும் வர வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது.

English summary
Chennai police trifurcation: Avadi and Tambaram police circle to get special officers says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X