சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறுவது பொய்யான செய்தி.. காவல்துறை

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி என சென்னை காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

    Chennai police tweets that an elderly man dies in Old Washermenpet protest is not a true news

    குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின.

    இதில் டெல்லி ஷாகீன்பாக் போல பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் எச்சரித்தனர்.

    விஸ்வரூபம் எடுக்கும் சிஏஏ.. வண்ணாரபேட்டையில் தடியடியை கண்டித்து இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டம்விஸ்வரூபம் எடுக்கும் சிஏஏ.. வண்ணாரபேட்டையில் தடியடியை கண்டித்து இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டம்

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது.

    இதையடுத்து சென்னை காவல்துறை ட்விட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் 70 வயது மதிக்கத்தக்க இந்த பெரியவர் இயற்கையாக மரணமடைந்ததை நேற்று வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின் போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக, வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

    எனவே இது ஒரு பொய்யான செய்தி. இந்தப் பெரியவர் இறந்ததற்கும், CAA போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

    English summary
    Chennai police tweets that an elderly man dies in Old Washermenpet protest is not a true news. There is no relation between elder man death and anti CAA protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X