சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதுதான் கடைசி நொடி.. குப்பை லாரி ஏறி இறங்கியதில்.. நசுங்கி உயிரிழந்த போலீஸ்காரர்!

சென்னையில் குப்பை லாரி மோதி காவலர் பலியானார்

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸ்காரர் மீது ஏறி இறங்கிய குப்பை லாரி

    சென்னை: நள்ளிரிவு.. மேடு பள்ளமாக இருந்த ரோட்டில் தடுமாறி விழுந்த போலீஸ்காரர் மீது.. குப்பை லாரி ஒன்று வேகமாக ஏறி இறங்கி விட்டது.. இதில் உடல் நசுங்கி உயிரிழந்தார் போலீஸ்காரர் பழனிகுமார்!

    சென்னை மகாகவி பாரதியார் நகர் போலீஸ் ஸ்டேஷன் தலைமைக் காவலர் பழனிகுமார். இவர் நுண்ணறிவுப் பிரிவிலும் பணியாற்றி வந்தவர். 45 வயதாகிறது. சென்னை பரங்கிமலை போலீஸ் குவார்ட்டஸில் விமலா என்ற மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    chennai policeman died in road accident

    நேற்று அவரது டியூட்டி முடிய நள்ளிரவு ஆகிவிட்டது. அதனால் பைக் எடுத்து கொண்டு, ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார். மகாகவி பாரதியார் நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, சாலையின் நடுவே பள்ளத்தில் பைக் இறங்கிவிட்டது.

    நைட் நேரம் என்பதால், அந்த பள்ளத்தை பழனிகுமார் சரியாக கவனிக்கவில்லை.. இதனால், பைக்குடன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.. அந்த நேரம் பார்த்து, குப்பை லாரி ஒன்று வேகமாக வந்து, கீழே விழுந்து கிடந்த பழனிகுமார் மீது ஏறிவிட்டது. பழனிகுமார் மீது ஏறாமல் இருக்க லாரி டிரைவர் எவ்வளவோ முயற்சித்தும் பிரேக் போட பார்த்தார்.. ஆனால் முடியவில்லை.

    வந்த வேகத்தில் அவர் மீது ஏறி இறங்கிவிட்டது.. இதில், அங்கேயே உடல் நசுங்கி பழனிகுமார் இறந்துவிட்டார். தகவலறிந்து விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு, லாரி டிரைவரை கைது செய்தனர். குப்பை லாரி மோதி, பழனிகுமார் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    அவரது உடலுக்கு காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். போலீஸ் மரியாதைக்கு பிறகு பழனிகுமார் உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம், மேலவளவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    English summary
    Corporation garbage truck collision and kills policeman palanikumar in chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X