சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையை தெறிக்க விட்ட மழை...பல இடங்களில் வெள்ளம்...மக்கள் மகிழ்ச்சி!!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் பல இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக வளசரவாக்கம், கே.கே.நகரில் 50 எம்எம் மழை பெய்துள்ளது. ஆதலால், சென்னை நகரமே இன்று ஜில்லென்று காணப்படுகிறது.

Recommended Video

    200 ஆண்டுகளில் முதல் முறையாக வரலாறு படைக்கப்போகும் சென்னை

    இம்மாத துவக்கத்தில் இருந்து சென்னையின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தாண்டும் சென்னையை மழை ஏமாற்றி விடுமோ என்ற அச்சம் இருந்து வந்தது. குறிப்பாக கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை என்று சென்னை மாநகருக்கு இந்த முறை அதிகமாக தண்ணீரின் தேவையும் இருக்கிறது.

    சென்னையை தெறிக்க விட்ட மழை...பல இடங்களில் வெள்ளம்...மக்கள் மகிழ்ச்சி!!சென்னையை தெறிக்க விட்ட மழை...பல இடங்களில் வெள்ளம்...மக்கள் மகிழ்ச்சி!!

    Chennai Rain: Valasaravakkam, KK Nagar received heavy rain

    மருத்துமனைகளில், வீடுகளில், அரசு அலுவலகங்களில் என அதிகமாக தண்ணீரின் தேவை உள்ளது. இந்த நிலையில்தான் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னையின் பல இடங்களில் அதிக மழை பெய்துள்ளது. வளசரவாக்கம், கே.கே.நகரில் 50 எம்எம் மழையும், விமான நிலையத்துக்கு பின்புறம் இருக்கும் கோளப்பாக்கம் ஏஆர்ஜியில் 63 எம்எம் மழையும் பெய்துள்ளது.

    சென்னையில் பின்னி பெடல் எடுத்த பேய்மழை- பல இடங்களில் குறைந்தபட்சமே 5 செ.மீ மழை!சென்னையில் பின்னி பெடல் எடுத்த பேய்மழை- பல இடங்களில் குறைந்தபட்சமே 5 செ.மீ மழை!

    Chennai Rain: Valasaravakkam, KK Nagar received heavy rain

    சென்னையின் தென் பகுதியில் நல்ல மழை பெய்து இருக்கும் நிலையில், மத்திய சென்னையில் குறிப்பிடத்தக்க வகையில் மழை இல்லை. நுங்கம்பாக்கத்தில் 7 எம்எம் மழை மட்டுமே பதிவாகி இருக்கிறது. குரோம்பேட்டையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    Chennai Rain: Valasaravakkam, KK Nagar received heavy rain

    ''இந்த ஜூலை மாதத்தில் மட்டும் மீனம்பாக்கத்தில் 271 எம்எம் மழை பதிவாகி இருக்கிறது. இன்று மாலை 5.30 மணி வரை 11 எம்எம் மழை பதிவாகி இருக்கிறது. 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூலை மாதத்தில் 300 எம்எம் மழை என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ள இன்னும் மீனம்பாக்கத்தில் 18 எம்எம் மழை பெய்ய வேண்டும்'' என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

     சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி! சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

    Chennai Rain: Valasaravakkam, KK Nagar received heavy rain

    மழையால் திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

    சென்னையில் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்ததால் உள்நாட்டு விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இறங்க வேண்டிய 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. ஹைதராபாத்திலிருந்து 220 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,மதுரையிலிருந்து 75 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,வாரணாசியிலிருந்து 78 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை. இதனால் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

    45 பயணிகளுடன் டெல்லியிலிருந்து வந்த விமானமும், 69 பயணிகளுடன் தூத்துக்குடியிலிருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரமாக வட்டமடித்தன. மாலை5.30 மணிக்கு மேல் மழையின் வேகம் குறைந்ததும் சென்னையில் விமானங்கள் தரையிறங்கின. பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்களும் இரவு 7 மணிக்கு மேல் சென்னைக்கு திரும்பின.

    English summary
    Chennai Rain: Valasarawakkam, KK Nagar received heavy rain
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X