சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மழை.. அண்ணா சாலையில் வண்டியில் போக போறீங்களா.. இதை பார்த்திட்டு போங்க!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் அண்ணாசாலையில் மழை குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக மக்கள் அந்த சாலையை கடப்பதற்கு கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Recommended Video

    சென்னையில் நல்ல மழை.. வெள்ளக்காடான சாலைகள் - வீடியோ

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய மறு நாளே சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது. இன்று அதிகாலை சிலமணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்துள்ளது.

    சென்னையில் இன்று பெய்த இந்த அடர்த்தியான மழையால் வழக்கம் போல் சென்னையின் சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எங்கெல்லாம் மழை நீர் செல்லவழியில்லையோ அங்கே எல்லாம் குளம் போல் மாறிக்கிடக்கிறது. சென்னை வாசிகள் தினசரி செல்லும் சாலைகளில் மழை எங்கெல்லாம் பெய்தால் மொத்தமாக தேங்குமோ அத்தனை இடங்களிலும் இன்று மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

     வட்டக் கிணறு.. வத்தாத கிணறு.. ஒரே நாள் மழையில்.. நிறைஞ்சு போச்சுய்யா! வட்டக் கிணறு.. வத்தாத கிணறு.. ஒரே நாள் மழையில்.. நிறைஞ்சு போச்சுய்யா!

     சென்னை அளவுக்கு பாதிப்பில்லை

    சென்னை அளவுக்கு பாதிப்பில்லை

    பொதுவாக மற்ற ஊர்களில் மழை பெய்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் அங்கெல்லாம் மழை நீர் வடிகால்கள் சென்னை அளவுக்கு ஆக்கிரமிக்கப்படவில்லை. இதேபோல் மழை நீர் தேங்கும் இடங்களில் வீடுகளும், சாலைகளும், பேருந்து நிலையங்களும் கட்டப்படவில்லை. அதனால் சென்னையில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

     மாநகராட்சி ஊழியர்கள் உழைப்பு

    மாநகராட்சி ஊழியர்கள் உழைப்பு

    சென்னை சாலைகளில் அதிக அளவு தேங்கும் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக போராடித்தான் வெளியேற்றி வருகிறார்கள். அதனால் இன்றைக்கு பெய்த மழையால் தேங்கிய நீர், வெயிலுக்கு பின்னர் மெதுவாகவே வடியும். இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்படப்போவது வாகன ஓட்டிகள் தான். காலையில் வேலைக்கு செல்வது நிச்சயம் சவாலாக இருக்கும்.

     ஜிபி ரோட்டில் பாருங்கள்

    ஜிபி ரோட்டில் பாருங்கள்

    சென்னை அண்ணா சாலை ஜிபி ரோட்டில் இந்த கனமழையால் கடுமையாக வெள்ள நீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் வெள்ள நீர் வடிய வடிகால் வசதிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இந்த பகுதியில் வெள்ளம் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. மிக கனமழை பெய்தால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிதந்து தான் சாலையை கடக்கும் நிலை உள்ளது.

    போக்குவரத்து நெரிசல்

    அண்ணா சாலை மட்டுமல்ல, எழும்பூரில் உள்ள சாலைகளும், பூந்தமல்லி சாலையும் இதேபோல் தான் மழை நீரில்மிதக்கின்றன. சாலைகள் மட்டும் மழை நீரில் மிதக்கவில்லை. அதில் செல்லும் வாகனங்களும் மிதந்து தான் செல்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மழை நீரில் தத்தளித்து வருகிறார்கள். சென்னைக்கு மிக கனமழை என்பது எப்போதும் கசப்பான அனுபவங்களையே தருகிறது.

    English summary
    Due to the heavy rains in Chennai, it is stagnant like a rain pool in Anna Salai. Because of this people are having a hard time crossing that road.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X