சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெரிகுட் மக்களே... சென்னையில் அப்படியே குறைந்த காற்று மாசு!

Google Oneindia Tamil News

Recommended Video

    கோர்ட் தீர்ப்பு எதிரொலி... சென்னையில் குறைந்த காற்று மாசு

    சென்னை: சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்றின் மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்னரும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் காற்று மாசு அளவிடப்பட்டு வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருவிகளை வைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கிறது.

    Chennai recorded low air pollution compared to last year

    இதே போன்று வேளச்சேரி, மணலி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருவிகளை வைத்து காற்றின் மாசு குறித்த ஆய்வை செய்து வருகிறது. காற்றில் உள்ள தூசு, பட்டாசில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் டைஆக்சைடு, சல்பர் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன.

    [வரலாற்றில் இடம்பிடித்த தீபாவளி... டைம்டேபிள் நேரத்தை கடந்து பட்டாசு வெடித்த 600 பேர் மீது வழக்கு!]

    இதன்படி வேளச்சேரியில் கடந்த ஆண்டை விட மாசின் அளவு குறைந்துள்ளது தூசியின் அளவு 259ர் இருந்து 33 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடு 29ல் இருந்து 16 ஆகவும் குறைந்துள்ளது. சல்ஃபர் டைஆக்சைடு 15ல் இருந்து 7 ஆகவும், கார்பன் மோனாக்சைடு 4ல் இருந்து 33 ஆகவும் குறைந்துள்ளது. சென்னை மட்டுமின்றி டெல்லியிலும் இந்த ஆண்டு காற்றின் மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக மக்கள் அதனை சரிவர பின்பற்றியதன் விளைவாக காற்றின் மாசு குறைந்துள்ளது.

    English summary
    Air pollutioj in Chennai is recorded low compared to last year as SC resticted the time to fire crackers and people also strictly obeyed the order is cleared out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X