Just In
சென்னையில் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 589 பேருக்கு தொற்று
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 589 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 75
- செங்கல்பட்டு 347
- சென்னை- 1150
- கோவை- 589
- கடலூர்- 307
- தருமபுரி- 16
- திண்டுக்கல் - 129
- ஈரோடு - 127
- கள்ளக்குறிச்சி- 66
- காஞ்சிபுரம் - 187
- கன்னியாகுமரி - 98
- கரூர்- 47
- கிருஷ்ணகிரி- 11
- மதுரை- 127
- நாகப்பட்டினம் - 105
- நாமக்கல் - 92
- நீலகிரி - 30
- பெரம்பலூர்- 10
- புதுக்கோட்டை- 86
- ராமநாதபுரம்- 29
- ராணிப்பேட்டை- 124
- சேலம் - 497
- சிவகங்கை - 26
- தென்காசி - 94
- தஞ்சாவூர்- 125
- தேனி- 77
- திருப்பத்தூர்- 47
- திருவள்ளூர்- 299
- திருவண்ணாமலை- 140
- திருவாரூர் - 113
- தூத்துக்குடி- 111
- நெல்லை- 106
- திருப்பூர்- 70
- திருச்சி - 95
- வேலூர்- 125
- விழுப்புரம்- 176
- விருதுநகர்- 90