சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்.. மாஸ்க் இல்லை, சமூக இடைவெளியும் கிடையாது.. ரொம்ப கஷ்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

Recommended Video

    சென்னையில் அதிகரித்த கொரோனா... என்ன நடந்தது?

    கடந்த ஏப்ரல் 12ம் தேதி தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதுதான் அதிகபட்சமாக இருந்த நிலையில், பிறகு படிப்படியாக பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    Chennais Koyambedu wholesale market functions as usual

    ஆனால், நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்தது. அதிலும் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இப்படி ஒரு மோசமான சூழ்நிலை நிலவும் நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த நோய் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சென்னையில் மிக முக்கியமான சந்தை பகுதியான கோயம்பேடு இன்று காலை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    அங்கு கூட்டம், கூட்டமாக மக்கள் வருகை தந்திருந்தனர். காய்கறி விற்பனை செய்பவர்களாக இருக்கட்டும், அல்லது வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானோராக இருக்கட்டும்.

    கையில் கையுறை அணியவில்லை. முகத்தில் குறைந்தபட்சம் சாதாரணமான ஒரு மாஸ்க் கூட அணியவில்லை. இப்படி மாஸ்க் அணியாமல் காய்கறி விற்பவர் மற்றும் காய்கறி வாங்க வருவோர் யாராவது தும்மினால், நோய் இருந்தால், அது பிறருக்கும் பரவக்கூடும். கொரோனா என்று இல்லை, சாதாரண சளி கூட இப்படி பரவும். அது பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்திவிடுமல்லவா.

    ஒருவேளை கொரோனா வைரஸ், பாதிப்பு இருந்தால், காய்கறி வழியாகவும் அதை வாங்கி செல்வர் வீடுகளுக்கு பரவக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி அங்காடி பகுதியில் சுமார் 10,000 மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாதுகாப்புக்கும், வந்து செல்வோர் பாதுகாப்புக்கும் என்னதான் வழி?

    காய்கறி என்பது அத்தியாவசிய தேவைதான். ஆனால் வரைமுறை மற்றும் நெறி முறைக்கு உட்பட்டு தானே இது விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Tamil Nadu: Chennai's Koyambedu wholesale market functions as usual, amid Coronavirus lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X