சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரியான பாதையில் சென்னை.. சவாலான ஏரியாக்களில் குறைந்த கொரோனா.. அதிகாரிகள் ஹேப்பி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில், எங்கு குறைய வேண்டுமோ அங்கு குறைய ஆரம்பித்துள்ளது கொரோனா. இதனால் அரசும், அதிகாரிகளும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

சென்னையில் ராயபுரம் மண்டலம், கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது. இதற்கு காரணம், அது குடிசை பகுதிகள் நிறைந்த ஏரியா. இதேபோலத்தான் சென்னையில் எங்கெல்லாம், குடிசை பகுதிகள் உள்ளதோ அங்கு பாதிப்பு அதிகமாக பதிவானது.

ஆனால், சமீப காலமாக சென்னையின் குடிசை பகுதிகளில் வேகமாக கொரோனா குறைந்து வருகிறது. குடிசை பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கஷ்டம் என்ற நிலையில், அங்கு பாதிப்பு குறைந்துள்ளது முக்கியமான திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.

நடிகர் பார்த்திபன் குரலில் வீழ்வேனென்று நினைத்தாயோ! மீண்டு வருவேன்- நான் சென்னை- அசத்தல் வீடியோ நடிகர் பார்த்திபன் குரலில் வீழ்வேனென்று நினைத்தாயோ! மீண்டு வருவேன்- நான் சென்னை- அசத்தல் வீடியோ

7 சதவீதமாக குறைந்தது

7 சதவீதமாக குறைந்தது

சென்னை நகரின் மொத்த கேஸ்களில், குடிசை பகுதிகளில் பங்களிப்பு, 7-10% மட்டுமே என்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ். ஏப்ரலில் இது 30 சதவீதம் என்ற அளவுக்கு அதிகமாக இருந்ததாம். நகரத்தில் இதுபோன்ற 1,979 அதிக மக்கள் அடர்த்தி உள்ள பகுதிகள் உள்ளன. கடந்த 45 நாட்களில் இதில் 1,500 பகுதிகள் ஒரு கேஸ்கூட பதிவு செய்யவில்லை என்பது நல்ல தகவல்.

ராயபுரம் நிலவரம்

ராயபுரம் நிலவரம்

மே மாத இறுதியில், ராயபுரத்தில் 234 கேஸ்கள் பதிவாகின. சராசரியாக அங்கு தினமும் 18 கேஸ்கள் பதிவாகின. ஆனால் தற்போது அது 9 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் உள்ள 7,680 கேஸ்களில் 566 பேர் மட்டுமே ராயபுரம் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மே மாதம் திட்டம்

மே மாதம் திட்டம்

கடந்த 45 நாட்களில் சென்னை குடிசைப் பகுதிகளில் கொரோனா கேஸ்களில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். "மே மாதத்தில், இந்த இடங்களில் ஒரு சமூக தலையீட்டு திட்டத்தை நடத்த நாங்கள் முடிவு செய்தோம், முகக் கவசங்களை அணிவது, கைகளை கழுவுதல் மற்றும் சமூக தூரத்தை பராமரிப்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்துவதில் கவனம் செலுத்தினோம்.

தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள்

இந்த பணியை மேற்கொள்ள 92 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம். மே 19 அன்று, பணிகள் தொடங்கியது. ஒரு மாதத்தில் நல்ல முடிவுகளைப் பார்க்கத் தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் சுமார் 200 வீடுகள் தன்னார்வலர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவர்கள் வீட்டில் வசிப்போரிடம் தினமும் ஒரு மணி நேரம் உரையாடி, விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கமாக தெரிவித்தனர். முகக் கவசங்களை அணி விகிக்கச் செய்வதில், 70% அளவுக்கு வெற்றி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வீடுகளுக்கே டாக்டர்கள்

வீடுகளுக்கே டாக்டர்கள்

தண்டையார்பேட்டையிலுள்ள, சில பகுதிகளில், காய்ச்சல் கிளினிக்குகள் வீடு வீடாக சென்று சோதித்து பார்த்தன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வீடுகளுக்குச் சென்றனர். சந்தைகள் ஹாட்ஸ்பாட்களாக மாறாமல் இருப்பதில் உறுதி காட்டினோம். கேஸ் எந்த மார்க்கெட்டில் பதிவானாலும், அந்த மார்க்கெட் மூடப்பட்டது. ஷர்மா நகரில் உள்ள சந்தை போன்ற சந்தைகள் மூடப்பட்டன. இவ்வாறு ஒரு அதிகாரி தெரிவித்தார்.

சென்னையில் குறைந்த கொரோனா

சென்னையில் குறைந்த கொரோனா

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 3வது நாளாக 2000த்துக்கும் குறைவானோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு ஜூன் 4ம் தேதி முதல்தான், 2000த்துக்கு கீழே தினசரி கேஸ்கள் எண்ணிக்கை பதிவாக ஆரம்பித்துள்ளது. இதற்கு குடிசை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்பட்டதும் முக்கிய காரணமாக இருக்கிறது.

English summary
Slum areas in Chennai no longer corona hotspot, as cases comes down very sharply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X