சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து... தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது- வீடியோ

    சென்னை: சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்,தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

    சென்னையில் முதல் சேலம் செல்ல 8வழி பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக அன்புமணி ராமதாஸ், திமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பூவலகின் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என 10க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் விளைநிலங்களை கையகப்படுத்தவும் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, அளித்த இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்

    தீர்ப்பால் சந்தோஷத்தில் அன்புமணி.. சங்கடத்தில் எடப்பாடி, வருத்தத்தில் பாஜக தீர்ப்பால் சந்தோஷத்தில் அன்புமணி.. சங்கடத்தில் எடப்பாடி, வருத்தத்தில் பாஜக

    திட்டம் ரத்து

    திட்டம் ரத்து

    சென்னை- சேலம் இடையே எட்டு வழிச்சாலை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலை திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    நிலம் கையகப்படுத்த தடை

    நிலம் கையகப்படுத்த தடை

    சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிய பின்னர் தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதை ஏற்க முடியாது.இந்த 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தக் கூடாது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்தி இருந்தால்,அது செல்லாது.

    ஆணவங்கள் பழைய நிலை

    ஆணவங்கள் பழைய நிலை

    சுற்றுச்சூழல் குறித்து போதிய முன் ஆலோசனை பெறாமல், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

    பீட் பேக் இந்தியா

    பீட் பேக் இந்தியா

    இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு அவசர கதியிலே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியால் தடை செய்யப்பட்ட பீட் பேக் இந்தியா என்ற நிறுவனம் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டது தவறு.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    குறைந்த பட்சம் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் முறையாக ஆய்வு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் சுற்றுப்புறச்சூழல் அனுமதி வாங்கப்படவில்லை.

    வனத்தில் ஆய்வு

    வனத்தில் ஆய்வு

    வனவிலங்குகள் ஆய்வு மற்றும் வன ஆய்வு என எந்த ஒரு ஆய்வும் 8வழிச்சாலை திட்டத்துக்கு செய்யப்படவில்லை. இதேபோல் அரசின் எந்த ஒரு துறையிலும் முன் அனுமதி பெறப்படவில்லை.

    மரங்களை வெட்ட தடை

    மரங்களை வெட்ட தடை

    விவசாய நிலங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்திய காவல்துறையின் நடவடிக்கையை நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. மேலும் மரங்களை வெட்டவும் ஏற்கனவே இடைக்கால தடை விதித்து இருந்தது-

    English summary
    Chennai-Salem 8-lane highway plan Cancel by Madras HC, Main features of the verdict of chennai salem expressway case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X