சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொலையில் முடிந்த வாய் தகராறு - வன்மம் வைத்து கத்தியால் குத்திய பாஜக பிரமுகர் மகனுடன் கைது

பைக்கில் செல்ல வழிவிட மறுத்த மாணவர்களை பாஜக நிர்வாகி தனது மகனுடன் சென்று கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். இதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். கொலை வழக்கில் பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள

Google Oneindia Tamil News

சென்னை: வாய் தகராறுகள் கூட கொலையில் முடிகின்றன. காரணம் வன்மம்தான். பைக்கில் செல்லும் போது வழி விட மறுத்தார் என்பதற்காக மாணவர்களை இரும்புக்கம்பியால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளார் பாஜக நிர்வாகி. இதில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் உயிரிழக்கவே, கொலை வழக்கில் பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கத்திக்குத்தில் காயமடைந்து உயிரிழந்த மாணவர் பெயர் விக்னேஷ் என்பதாகும். பம்மல் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். குரோம்பேட்டையில் நடந்த மாத கோவில் திருவிழாவைக் காண தனது நண்பர் நந்தா உடன் கடந்த வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றார். மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியே வந்த பாஜக நிர்வாகி மதனுக்கு அவர் மகன் நித்யானந்தாவிற்கும் பைக்கில் வழி விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. பின்னர் சமாதானமாகி சென்று விட்டனர். ஆனால் வன்மம் மட்டும் மாறவில்லை.

Chennai School boy stabbed by BJP worker at Road rage dies

கோவில் திருவிழா முடிந்து வெளியே வந்த போது மதனும், நித்யானந்தாவும் கையில் இரும்புக்கம்பி, கத்தியுடன் காத்துக்கொண்டிருந்தனர். விக்னேஷ், நந்தாவை கீழே தள்ளி விட்டு இரும்பு கம்பியால் அடித்தனர். கத்தியால் குத்தி காயப்படுத்தினர். இதில் மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நந்தாவிற்கு காயத்திற்கு தையல் போடப்பட்டது.

அருண் ஜேட்லியா? அமித்ஷாவா? சு.சுவாமி குறிப்பிடும் சகுனி யார்? அருண் ஜேட்லியா? அமித்ஷாவா? சு.சுவாமி குறிப்பிடும் சகுனி யார்?

படுகாயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்றிரவு உயிரிழந்தார். சாதாரண வாய் தகராறு கத்திக்குத்து வரை சென்று கொலையில் முடிந்துள்ளது. கொலை வழக்காக பதிவு செய்த சங்கர் நகர் காவல்துறையினர், மதன், நித்யானந்தம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

English summary
Police said Vignesh, 16, and Nandha, 19, were going to atten wo days after two teenagers were attacked by a father-son duo with a knife and a rod following an incident of road in Shankar Nagar, one of youths died on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X