சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொகுசு வாழ்க்கை.. கணவன், மாமனார், மாமியாரை கொன்றேன்.. சவுகார்பேட்டை பகீர்.. மருமகள் வாக்குமூலம்

Google Oneindia Tamil News

சென்னை: சொகுசாக வாழ பணம் தேவைப்பட்டதால் கணவன், மாமனார், மாமியாரை கொன்றேன் என சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தலில் சந்த் (74).. இவர் சென்னை சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவில் வசித்து வந்தார். அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) மற்றும் மருகமள் ஜெயமாலா ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 11ம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுத்த அந்த நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா ரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுத்த அந்த நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா

தப்பிய மருமகள்

தப்பிய மருமகள்

அதில், பைனான்சியர் தலில் சந்த். மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகிய 3 பேரை சுட்டுக்கொன்றது அவரது மருமகள் ஜெயமாலா என்பது விசாரணையில் தெரியவந்தது. கணவன், மாமானார் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய ஜெயமாலா, சகோதரர்கள் விலாஷ் மற்றும் ராஜிவ் ஷிண்டேவுடன் ஆக்ராவில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்துள்ளார்.

சுற்றி வளைத்த போலீஸ்

சுற்றி வளைத்த போலீஸ்

அப்போது, பதற்றத்தில் கையில் வைத்திருந்த செல்போனில் கால் பட்டனை அழுத்தி இருந்திருக்கிறார். ஏற்கனவே, ஜெயமாலாவின் செல்போன் சிக்னலை கண்காணித்து வந்த தனிப்படையினர், அதை வைத்து அவர்கள் தங்கியிருந்த ஓட்டலை சுற்றிவளைத்து, அவர்களை கைது செய்தார்கள்

சொகுசாக வாழ கொலை

சொகுசாக வாழ கொலை

ஜெயமாலாவிடம் நடத்திய விசாரணையில். சொகுசாக வாழ பணம் தேவைப்பட்டதால் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், என் கணவன், மாமனார, மாமியாரை கொன்று பணம், சொத்துகளை அபகரிக்க முடிவு செய்தேன். என் சகோதர் விலாஷ் வழக்கறிஞர் என்பதால், இவர் மூலம், ஓய்வுபெற்ற ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வாயிலாக 2 துப்பாக்கிகளை வாங்கி, கணவர் உள்ளிட்ட மூன்று பேரையும் சுட்டுக்கொன்றோம்.

எப்படி கொன்றார்

எப்படி கொன்றார்

மூவரையும் கொன்றுவிட்டு, வீட்டில் உள்ள நகை, பணத்தை அள்ளிச் செல்ல திட்டமிட்டோம். ஆனால், வீட்டில் ₹1.80 லட்சம் மட்டுமே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, இறந்து கிடந்த மாமியார் கைகளில் இருந்த 4 தங்க வளையல்களையும் உருவிக் கொண்டு தப்பினோம்" இவ்வாறு கூறினார்.கைதான ஜெயமாலா உள்ளிட்ட மூவரை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

English summary
The daughter-in-law, who was arrested in the chennai Sowcarpet triple murder case, has confessed to police that she killed her husband, father-in-law and mother-in-law because she needed money to live in luxury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X