சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு.. கடைசி நொடியில் தீர்ப்பு ஒத்திவைப்பு.. இதுதான் காரணம்!

மதிமுக எம்பி வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி மொழியை திணிக்கும் வெறியில் மத்திய அரசு: வைகோ கண்டனம்!

    சென்னை: மதிமுக எம்பி வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபடவில்லை. வைகோ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவில்லை.

    2006ல் திமுக சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் மதிமுக கட்சியை திமுக உடைக்க பார்க்கிறது.

    Chennai Special court will give its verdict in DMKs defamation case against Vaiko

    மதிமுகவினருக்கு பணம் கொடுத்து கருணாநிதி எங்கள் தொண்டர்களை திமுக பக்கம் இழுக்கிறார். இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

    வைகோ அளித்த இந்த மனு அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திமுக தரப்பில் உடனடியாக சென்னை ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதை விசாரிக்க கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வைகோவிற்கு எதிரான அவதூறு வழக்கு கடந்த 13 வருடங்களாக எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது . இந்திய தண்டனை சட்டத்தின் அவதூறு பரப்புதல் சட்டப்பிரிவு, 499 மற்றும் 500 கீழ் இரண்டு வருடம் வரை இந்த வழக்கில் அதிகமாக தண்டனை வழங்க முடியும்.

    இதனால் இந்த வழக்கில் வைகோவிற்கு இரண்டு வருடம் தண்டனை கிடைத்தால் அவரின் ராஜ்ய சபா எம்பி பதவி பறிபோகும். திமுக மூலம்தான் தற்போது வைகோ எம்பியாக இருக்கிறார். அவர்கள் மூலமே வைகோ பதவி பறிபோகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வைகோ தரப்பில், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும் செப்டம்பர் 3 ம் தேதி தான் டிஸ்சார்ஜ் என்றும் வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனால் தீர்ப்பு தேதியை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கவும் வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதை நீதிபதி கருணாநிதி ஏற்கவில்லை. தீர்ப்பை நீண்ட நாளுக்கு ஒத்தி வைக்க முடியாது எனக்கூறி வழக்கை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    English summary
    Chennai Special court will give its verdict in DMK's defamation case against Vaiko today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X