• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

CSK: விட்ரா விட்ரா.. 12 வருஷக் கதையைப் பாரு மாமு.. அப்புறம் வந்து எங்க கிட்ட மோது!

|

சென்னை: இன்னா.. இன்னா.. ஏதோ சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யக் கூடாததை செஞ்சுட்ட மாதிரி டீமை வச்சு பரோட்டா போட்டுனுக்கிறீங்கோ... ஒரு விஷயம் தெரியுமா.. கடந்த 12 வருஷ வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாதான் அது தெரியும்.. அது இன்னா தெரியுமா?

ஐபிஎல் தொடங்கி ஒருவாட்டி கூட சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் போகாமல் இருந்ததே கிடையாது.. ஆனால் மத்த அணிகளையெல்லாம் ஒரு வாட்டி திரும்பிப் பாருங்களேன்.. வரலாறு நாறிப் பூடும் மாமே!.. அம்புட்டு ஒர்ஸ்ட் ஹிஸ்டரி வச்சிருக்கானுங்கோ அவனுங்கெல்லாம்.

இப்ப என்னா நடந்து போச்சுன்னு தையா தக்கான்னு குதிக்கிறாங்க.. ஆமாய்யா.. இந்த வாட்டி பிளே ஆப்ல சென்னை சூப்பர் கிங்ஸ் கிடையாதுதான்.. அதுக்கு இன்னாவாம்.. முதல்ல உங்க முதுகைப் பாருங்கய்யா.. பிறகு வந்து அவன் மேலே ஏறி விளையாடலாம்.

ரேஷன் கடைப் பக்கம் போனீங்களா.. ஆன்லைன் மெம்பர்ஷிப்புக்கு .. ஆள் சேர்க்க சுத்துதாமே திமுக!

 12 வருஷ கதை

12 வருஷ கதை

2008ம் ஆண்டு ஆரம்பிச்ச கதை மாமு இது.. மொத்தம் 8 பேரு.. ஆனா மொத்தப் பேருக்கும் அல்வா கொடுத்து.. கில்லி மாதிரி துள்ளி விளையாடுச்சு தன்னோட முதல் தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ்.. பைனல் வரை போய் எகிறி அடிச்சுது... இல்லம்பியா நீ.. கப்பு நமக்கு கிடைக்கலை.. அத்த விடு..அது வேற கதை.. ஆனால் முத்திரை பதிச்சுச்சா இல்லையா. அந்த தொடரில் சென்னைதான் ஸ்டார் டீமே!.

 2வது தொடரில் அதகளம்

2வது தொடரில் அதகளம்

அடுத்த தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் அதகளம் பண்ணுச்சு.. ஆனால் நேரம் பாரு.. பைனலுக்குப் போக முடியலை. சப்பை டீம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும், இந்த டெக்கான் சார்ஜர்ஸும் போய் மொத்த சுவாரஸ்யத்தையே கெடுத்து குட்டிச்சுவராக்கிருச்சுங்கோ.. கப்பு என்னவோ பெங்களூருக்குக் கிடைக்கல.. அத்த வச்சு சென்னைக்காரன் பட்டாசு வெடிச்சான் தெரியுமா.. அதுதாய்யா சிஎஸ்கே கெத்துங்கிறது.

 2010ல் வரலாறு

2010ல் வரலாறு

2010ல் புது வரலாறு.. புது சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரிச்சு மேஞ்சோமா இல்லையா... அதுவும் யாரை.. பலசாலி, சச்சின் டீம் அப்படி இப்படின்னு பில்டப்பாவே பேசினாங்களே.. அந்த மும்பை இந்தியன்ஸை.. பைனலில் வச்சு சாத்தி எடுத்தாங்களா இல்லையா.. அதுவும் மும்பையில் வச்சே.. அதுதான்யா மெட்ராஸ் மாஸு.

 அடுத்த வருஷமும் நாமதான்

அடுத்த வருஷமும் நாமதான்

அடுத்து 2011ம் வருஷமும் சென்னைதான் தீபாவளி கொண்டாடுச்சு.. கப்பை வாங்கி கக்கத்தில் வச்சிக்கினு போட்டாங்க பாரு ஒரு குத்து.. மறக்க முடியுமா நீயி.. இல்லல்ல.. இங்க நீங்க ஒன்னை மறக்கக் கூடாது.. நாம கெலிச்ச கப்பு யாருக்கு எதிரா தெரியுமா.. பெங்களூரு டீமு.. மறக்க முடியுமா என்னா.. அதுதான் மச்சி கிளாஸு!

 12, 13 லூசில் விடு

12, 13 லூசில் விடு

அப்பாலிக்கி, 2012, 2013 ரெண்டு சீசனும் நமக்கு கை கொடுக்கல.. பட் நாமதான ரன்னர் அப்.. வேற யாரையும் அந்த இடத்துக்கு வர விடலையே.. பைனல்னா சென்னைன்னு வரலாறை திரும்பிப் பார்த்தா தெரியும்ய்யா.. அப்பேர்பட்ட ஒஸ்த்தியான டீமு மாமு நம்து.. இன்னாவோ வாய் வலிச்சது மாங்கா புளிச்சது மாதிரியே பேசினுகிறீங்கோ!

 டப் கொடுத்தோம்ல

டப் கொடுத்தோம்ல

2014 பைனல் வர முடியலை.. ஆனால் 2015ல் வந்து நின்னோம்ல.. கப்பு கிடைக்கலை.. அத்த விடு.. அது வேற.. ஆனால் டஃப் கொடுத்தோம்ல பைனல்ல. அதுக்குப் பிறகு 2018ல் மறுபடியும் மஞ்சாக் கொடியை எடுத்து உசரத்துல பறக்க விட்டோம்ல.. அத மறக்கச் சொல்றியா.. 3வது கப்பு மாமே அது.. முத்தான கப்பு.

 தப்பிப் பொழச்சது மும்பை

தப்பிப் பொழச்சது மும்பை

அட போன வருஷத்தை அதுக்குள்ள மறந்துட்டா எப்படி.. மும்பை இந்தியன்ஸ்தான் கப்பு அடிச்சது.. இல்லீங்கல.. ஆனா எப்படி அடிச்சது... ஜஸ்ட் 1 ரன்னுய்யா.. தப்பிச்சோம் பொழச்சோம்னு ஜெயிச்சானுக.. அதை எப்படி பெரிய சாதனைன்னு நீ சொல்லுவ.. அதெல்லாம் ஒரு ஜெயிப்பாய்யா.. இதெல்லாம் மறக்கக் கூடாதுய்யா.

 3 நமக்கு

3 நமக்கு

இதுவரைக்கும் 12 கப்பு போயிருக்கு.. அதுல 3 நமக்கு.. மும்பைக்கு போனா போகுதுன்னு ஒரு நாலு.. ஆனால் வரலாறு தெரியுமா உனக்கு.. ஒரு வாட்டி கூட நாம பிளே ஆப் போகாம இருந்ததே கிடையாது.. ஆனா மத்த 7 பேருக்கும் அந்த வரலாறு கிடையாது நைனா.. அத்த புரிஞ்சுக்கோ முதல்ல. மும்பை, மும்பைன்னு பினாத்துறானுகளே.. அது 4 வாட்டி பிளே ஆப் வாங்காம பினாயில் குடிச்சிட்டு கவந்திருக்கு.

 பெங்களூரு கதை தெரியும்ல

பெங்களூரு கதை தெரியும்ல

இந்த பெங்களூரு டீமு.. அது 7 வாட்டி போகலை.. அதுக்கு இன்னும் ஒரு வாட்டி கூட கப்பே கிடைக்கலை.. இதை விடவா.. மோசம் இருக்கும்!.. கொல்கத்தா 6 வாட்டி பிளே ஆப் போகலை.. ஹைதராபாத் சன் ரைசர்ஸுக்கு 5 வாட்டி உதயமே கிடைக்கலபா.. ராஜஸ்தான் ராயல்ஸ் கூட 6 வாட்டி பிளே ஆப் ஆக முடியாம பேக்கப் ஆயிருக்கு. டெக்கான் சார்ஜர்ஸ் இருந்துச்சே அது 8 வாட்டி போகலை.. அட இந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் சிங்குக 10 வாட்டியும் மொட்டைதானே.. மறக்க முடியுமா...

 யோசிச்சு பேசுங்கோ!

யோசிச்சு பேசுங்கோ!

நம்ம சென்னை ஹிஸ்டரில இப்படி ஏதாச்சும் ஒரு கலீஜு நடந்திருக்கா.. இல்லியே.. பின்ன என்னாத்துக்கு போட்டு வெளுக்குறானுக.. போய் புஸ்தகத்தை ஒழுங்கா படிச்சுட்டு வந்து பேசுங்கடா.. சென்னைன்னா கிங்கு.. சூப்பர் கிங்ஸ்னா கில்லி.. எகிறி அடிப்போம்.. சரியான நேரத்துல.. எக்குத்தப்பா வந்து வார்த்தையை விடாதீங்க.. நாங்கெல்லாம் பாய்றதுக்கு முன்னாடி பல தரம் யோசிச்சுதான் சம்பவமே செய்வோம்.. என்ன மாமே சர்தானே!

 
 
 
English summary
Chennai Super Kings fans feel that their favorite team will give a strong comeback next year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X