சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேண்டும் வேண்டும் ஊதிய உயர்வு வேண்டும்... இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் திடீர் போராட்டம்- வீடியோ

    சென்னை: ஊதிய உயர்வு கோரி சென்னையில் இன்றும் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பதற்காக பெருநகரங்களில் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஸ்விக்கியை பொருத்தமட்டில் இந்தியாவில் மொத்தம் 45 நகரங்களில் 45,000 உணவகங்களுடன் ஸ்விக்கி இணைந்து செயல்படுகிறது.

    Chennai Swiggy delivery staffs involve in strike for 3rd day

    உணவு டெலிவரி செய்ய மட்டுமே ஒரு லட்சம் பேர் உள்ளனர். இந்நிலையில் ஸ்விக்கியில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்கள் கடந்த இரு தினங்களாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஸ்விக்கியில் பணியாற்றுவோர் தாங்கள் எடுக்கும் ஆர்டர்களுக்கு தகுந்தமாதிரியே ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்.

    Chennai Swiggy delivery staffs involve in strike for 3rd day

    ஊக்கத் தொகையை வெளிப்படையாக மாற்றியமைக்க வேண்டும், இரவு நேரங்களில் போலீஸ் கெடுபிடிகள் குறித்து ஸ்விக்கி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த போராட்டம் இன்று தொடர்கிறது. தாம்பரத்திலும் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    English summary
    Chennai Swiggy delivery boys involve in protest demanding Salary hike and transparent in perks for 3rd day. This protest spreads also in Tambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X