சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க ஒருத்தரையும் காணோம்.. 30% வருவாய் தந்த டாஸ்மாக்கா இது?.. சென்னையில் நினைத்து பார்க்காத மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை டாஸ்மாக்களில் பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுனில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி கடந்த மே மாதம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

அதேபோல் எளிமையாக இ- பாஸ் பெற விதிமுறைகள் மாற்றப்பட்டு, அதற்கான தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் பணியிடங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் வேகமாக படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் சென்னையில் தற்போது டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு- புதுச்சேரியில் தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் அமலானது கொரோனா அதிகரிப்பு- புதுச்சேரியில் தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் அமலானது

சென்னை எப்படி

சென்னை எப்படி

மார்ச் மாதத்திற்கு பின் சென்னையில் இன்றுதான் டாஸ்மாக் திறக்கப்பட்டது. சென்னையில் காலை 10 முதல் இரவு 7 மணி வரை கடை இருக்கும். சென்னையில் டோக்கன் அடிப்படையில் மது வழங்கப்படும். ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் கடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான ஆலோசனை மற்றும் திட்டமிடலுக்கு பின் அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

சென்னையில் இதற்காக டாஸ்மாக் முன் சாமியானா பந்தல் போடப்பட்டது. இன்னொரு பக்கம் பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதால் நீண்ட வரிசைகள் அமைக்கப்பட்டது. மைக் செட் கூட போடப்பட்டது. மக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது . கவனமாக இருக்க வேண்டும் என்று போலீஸ் படையும் ஆங்காங்கே குவிக்கப்பட்டது. 5 மாதம் கழித்து டாஸ்மாக் திறப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகளில் பெரிய அளவில் கூட்டமே இல்லை. காலையில் 7 மணிக்கு கடை திறந்தது. 9 மணி வரை பெரிய அளவில் மக்கள் கூட்டம் வரவில்லை. 9 மணிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்தனர். ஆனால் அதிலும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக வரவில்லை. வெகு சிலரே வந்தனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இப்படி குறைவாக வந்த டாஸ்மாக் கூட்டத்தை பார்த்து டாஸ்மாக் ஊழியர்களே அதிர்ச்சி அடைந்தனர். என்ன இது நினைத்ததை விட இவ்வளவு குறைவாக கூட்டம் வந்துள்ளது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காலத்தில் தமிழகத்தில் மொத்த டாஸ்மாக் வருவாயில் சென்னையில் மட்டும் டாஸ்மாக் வருவாய் 30% என்று இருந்தது.ஆனால் அதற்கான எந்த சுவடும் இன்று தெரியவில்லை. மிக சொற்ப வருமானமே இன்று வரும் என்று கணித்துள்ளனர் .

காரணம் 1

காரணம் 1

இதற்கு இரண்டு காரணம் சொல்லப்படுகிறது.சென்னையில் இருந்த மக்கள் எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் சென்னையில் மக்கள் கூட்டம் இல்லை. இதனால் டாஸ்மாக் கூட்டமும் இல்லை. இப்போதுதான் மக்கள் திரும்பி வருகிறார்கள். இதனால் இனி வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Recommended Video

    August 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass- முதல்வர் அதிரடி | OneindiaTamil
    காரணம் 2

    காரணம் 2

    இதற்கு சொல்லப்படும் இன்னொரு காரணம் மக்களின் விழுப்புணர்வு. மக்கள் உண்மையில் கொரோனா காரணமாக அச்சம் அடைந்துள்ளனர். இதனால் கூட்டத்தோடு கூட்டமாக சென்று மது வாங்க அவர்கள் விரும்பவில்லை. 5 மாதம் பொறுத்துக் கொண்டவர்கள் இன்னும் சில நாட்கள் பொறுத்துக் கொள்வார்கள். பொறுமையாக இவர்களின் கூட்டம் வரும் நாட்களில் சேர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Chennai Tasmac sees very very less crowd on the first day after 5 months.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X