சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த போலீஸ்காரருக்கும் இந்த நிலை வரக்கூடாது.. இன்ஸ்பெக்டரால் தள்ளிவிடப்பட்ட காவலர் மனைவி குமுறல்

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸாருக்கு இடையில் மோதல்.. சிசிடிவி மூலம் வெளிவந்த பின்னணி!-வீடியோ

    சென்னை: சென்னை போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது காவலர் தர்மராஜின் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் தர்மராஜ். இவர் தனது தாய்க்கு திதி கொடுக்க வேண்டும் என்பதால் ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் விடுப்பு கடிதம் கொடுத்துள்ளார்.

    ஆனால் அவரோ விடுப்பு வழங்கவில்லை. இதையடுத்து கடந்த 21-ஆம்தேதி பணிக்கு வந்த காவலர் தர்மராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். இதில் மேலும் நான் என்ன செய்வது என்று வாக்கிடாக்கி மூலம் கேட்டுள்ளார்.

    தர்மராஜ்

    தர்மராஜ்

    இதையடுத்து ரவிச்சந்திரன் அவரை உடனடியாக அனுப்புவதாக கூறிவிட்டு தர்மராஜிடம் இருந்த வாக்கிடாக்கியை வாங்கிக் கொண்டு அனுப்பினார். தான் விடுப்பு தராததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்த தர்மராஜ் மீது கோபமாக இருந்தார் ரவிச்சந்திரன்.

    தலையில் காயம்

    தலையில் காயம்

    இதையடுத்து தர்மராஜ் அவரது வீட்டுக்கு போகும் வழியில் காத்திருந்த ரவிச்சந்திரன் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த தர்மராஜை கீழே தள்ளிவிட்டு அவரை பிடித்து ரோந்து வாகனத்தில் ஏற்றினார். அவரை கீழே தள்ளியதால் அவரின் கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    சான்றிதழ்

    சான்றிதழ்

    இந்நிலையில் அவரது வாயில் மதுவை ஊற்றி அவர் மதுபோதையில் இருந்ததாக மருத்துவமனையில் சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மராஜிடம் விசாரித்த போது தன்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளி ரோந்து வாகனத்தில் ஏற்றிய போது அரை மயக்கத்தில் இருந்தேன்.எனக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்தனர்.

    ஆயுதப்படைக்கு மாற்றம்

    ஆயுதப்படைக்கு மாற்றம்

    தேனாம்பேட்டை ஆய்வாளர் இரவிச்சந்திரன் மீது இந்த சிசிடிவி பதிவின் அடிப்படையில் அவர் கொலை முயற்சிக்கு ஈடான செயல் செய்தது தெரியவந்துள்ளது. ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அபிராமபுரம்

    அபிராமபுரம்

    இந்தச் சம்பவம் குறித்து தர்மராஜின் மனைவி தேவி(36) கூறும்போது, எனது கணவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். ஆனால் எனது புகாரை வாங்கி சி.எஸ்ஆர் நகல் கொடுப்பதற்கு 6 மணி நேரம் என்னை காத்திருக்க வைத்திருந்தனர்.

    கண்ணீர் மல்க

    கண்ணீர் மல்க

    இதுகுறித்து அவர் கூறுகையில் எனது கணவரின் கை, கால்களில் பலத்த காயங்கள் உள்ளன. அவரால் நடக்க முடியவில்லை. ஒரு தரமான மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை. அவரை வீட்டில் வைத்தே கவனித்து வருகிறேன். இனி இதுபோன்ற ஒரு சம்பவம் எந்த போலீஸாருக்கும் நடக்கக்கூடாது. எனது கணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    English summary
    Chennai Teynampet Police constable Dharmaraj's wife gives complaint against Inspector who attacks her husband.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X