சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வங்கியின் ஏடிஎம் அறையில் மூன்று ஏடிஎம்கள் இயந்திரங்கள் இருந்த நிலையில் எந்த ஏடிஎம்மில் கொள்ளையடிப்பது என்று குழப்பம் அடைந்த கொள்ளையன் தவறுதலாக பாஸ்புக் என்ட்ரி மிஷினை உடைத்துள்ளான்.

சென்னை சைதாப்பேட்டை ஜீனியஸ் சாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி, ஏ.டி.எம் இயந்திரங்களை வைத்துள்ளது. அந்த ஏடிஎம் அறையில் பணம் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய 2 இயந்திரங்களும், பாஸ்புக்கை என்ட்ரி செய்வதற்கு ஒரு இயந்திரமும் இருக்கிறது.

இந்த ஏ.டி.எம் அறைக்குள் புகுந்த ஒரு கொள்யைன், திடீரென மிஷினை உடைக்க ஆரம்பித்துள்ளான். இதை மும்பையில் இருந்து சிசிடிவியின் மூலம் கண்காணித்த வங்கியின் அதிகாரிகள், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

உன்னாவ் பலாத்கார வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றவாளி.. டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு உன்னாவ் பலாத்கார வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றவாளி.. டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

இயந்திரம் உடைப்பு

இயந்திரம் உடைப்பு

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு கொள்ளை சம்பவம் குறித்து உடனே அலார்ட் செய்தனர். இதையடுத்து விரைந்து சென்ற சைதாப்பேட்டை போலீசார் அதிகாலை 2.25 மணியளவில் வங்கி ஏடிஎம் அறைக்கு சென்று பார்த்துள்ளார்கள். அங்கு ஏ.டி.எம் அறையில் யாரும் இல்லை. ஆனால், பாஸ்புக் என்ட்ரி செய்யும் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

குற்றவாளி முகம்

குற்றவாளி முகம்

இதையடுத்து போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சம்பவம் நடந்த சமயத்தில் ஒருவர் ஏ.டி.எம் அறையிலிருந்து வெளியில் வரும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் அவரது முகம் தெளிவாக பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என்றனர்.

மாற்றி உடைத்தான்

மாற்றி உடைத்தான்

இது தொடர்பாக போலீசார் மேலும் கூறுகையில், சைதாப்பேட்டை வங்கியில் இருந்த ஏ.டி.எம் அறையில் மூன்று இயந்திரங்கள் அமைக்ப்பட்டுள்ளது. அங்கு நள்ளிரவில் சென்ற கொள்ளையன், எந்த இயந்திரத்தை உடைப்பது என்று தெரியாமல் கன்பியூஸ் ஆகி இருக்கிறான். பணம் எடுக்கும் டெபாசிட் செய்யும் இயந்திரங்களை விட்டுவிட்டு பாஸ்புக் என்ட்ரி போடும் இயந்திரத்தை உடைச்சிருக்கான்.

தப்பிவிட்டான்

தப்பிவிட்டான்

ஆனால், இந்த சம்பவம் நடந்துகிட்டு இருக்கும் போதே மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து போலீஸுக்குத் தகவல் வந்துவிட்டது. போலீஸார் அங்கு செல்லும் முன்பாக கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அவன் முகம் தெளிவாக தெரிகிறது எனவே குற்றவாளியை கைது செய்வோம் என்றார்கள்.

English summary
Try to rob at Chennai ATM: Chennai thief Broken passbook machine mistakenly in Saidapet ATM room
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X