சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2200 கிமீ.. கடலுக்கு அடியில் கேபிள்.. 8 தீவுகள் உடன் சென்னையை இணைக்க திட்டம்.. அசர வைக்கும் பிளான்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை கடலுக்கு அடியில் 8 தீவுகள் உடன் இணைக்கும் புதிய திட்டம் ஒன்றுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் பல்வேறு எதிர்கால நோக்கங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    fibre optic cable| 8 தீவுகள் உடன் சென்னையை இணைக்க திட்டம்

    இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியே பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வருகிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடல் வழியாக இணையத்தை வழங்க இந்த திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இப்படி அமைய உள்ள பைபர் ஆப்டிக் கேபிள் திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு மையம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்திய கடல் பகுதியில் இந்த கேபிள் செல்ல இருப்பதால், தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி இதற்கு அவசியம் ஆகும்.

    பைபர் ஆப்டிக் கேபிள் வழங்கியதில் முறைகேடு.. ஆர் எஸ் பாரதி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்கியதில் முறைகேடு.. ஆர் எஸ் பாரதி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த பைபர் ஆப்டிக் கேபிள் திட்டடத்திற்கு கேணி (CANI) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். சென்னை - அந்தமான் நிக்கோபார் தீவுகளை (Chennai-Andaman & Nicobar Islands) சுருக்கி இந்த பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அந்தமானில் உள்ள 8 தீவுகளுக்கு சென்னையில் இருந்து பைபர் ஆப்டிக் கேபிள் கொண்டு செல்வதுதான், அதுவும் கடலுக்கு கீழே கொண்டு செல்வதுதான் இந்த திட்டம் ஆகும்.

    என்ன இணையம்

    என்ன இணையம்

    அந்தமான் தீவுகளுக்கு வேகமான இணைய வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதேபோல் அந்தமானில் சீனா ஆதிக்கம் செய்ய கூடாது, அங்கு இணைய வசதியை ஏற்படுத்தி ரோந்துகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அந்தமான் தீவுகளுக்கு 100 ஜிபி வேகத்தில் இதன் மூலம் இணையம் வழங்கப்படும்.

    என்ன மாதிரியான தீவுகள்

    என்ன மாதிரியான தீவுகள்

    அதன்படி சென்னையை போர்ட் பிளேயர், லிட்டில் அந்தமான், கார் நிகோபார், காமோர்தா, கிரேட் நிக்கோபார், ஹாவ்லாக், லாங் மற்றும் ரங்கட் தீவுகள் ஆகிய தீவுகளை இணைக்க உள்ளனர். இந்த திட்டடத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதனால் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று கூறுகிறீர்கள். சென்னை இதனால் அதிக கவனம் பெறுகிறது.

    எங்கே செல்லும்

    எங்கே செல்லும்

    இந்த திட்டத்தின் படி 8 தீவுகளுக்கு சென்னையில் இருந்து மொத்தம் 2200 கிமீ தூரத்திற்கு பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கப்படும். மிகவும் பாதுகாப்பான திட்டமாகும் இது. என்இஏ கார்ப்பரேஷன் எனப்படும் ஜப்பான் நிறுவனம் மத்திய அரசு உடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் இன்னும் 3 வருடங்களில் இந்த திட்டத்தை செயலுக்கு கொண்டு வரும். இதனால் அந்த 8 தீவுகளுக்கு அதி வேக இணைய வசதி கிடைக்கும் என்கிறார்கள்.

    English summary
    Chennai to get connected with 8 Islands by a fibre optic cable plan soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X