• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜாலியா இருக்கலாம் வா".. மறுத்த கள்ளக்காதலி.. அநியாயமாக போன இரு உயிர்.. கள்ளக்காதலன் கைது

Google Oneindia Tamil News

சென்னை: உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலி மீதிருந்த ஆத்திரத்தில் அவரது பெற்றோரை கொலை செய்த சம்பவத்தில் கள்ளக்காதலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா (45). இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என 2 மகள்கள் உள்ளனர்.

மகன், மகள்களுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியே அவர்களது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆறுமுகத்தின் மகள் வசந்தி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

 இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், வசந்திக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோசஸ் (35) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

பெற்றோர்

பெற்றோர்

இந்த விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஆறுமுகம்- மஞ்சுளா இருக்கும் அதே பகுதியில் வசந்தியும் மோசஸும் தனியாக வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் மோசஸ் மதுவுக்கு அடிமையானதால் வசந்தியுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

மாங்காடு

மாங்காடு

இதனால், கடந்த 30ம் தேதி வசந்தி அவரது குழந்தைகளோடு மாங்காடு பகுதியில் உள்ள அவரது சகோதரி அமுலு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோசஸ், வசந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நீ வீட்டுக்கு வா என அழைத்தார். அதற்கு வசந்தி மறுப்பு தெரிவித்தார்.

ஜாலியாக இருக்கலாம்

ஜாலியாக இருக்கலாம்

வா ஜாலியாக இருக்கலாம் என அழைத்தாதகவும் தெரிகிறது. இனி உன்னோடு வரமாட்டேன் என மறுத்து, அவர் செய்த கொடுமைகளை சொல்லி அழுதுள்ளார். மேலும் மேலும் மோசஸ் அழைத்தும் வசந்தி மறுத்ததால் ஆத்திரமடைந்த மோசஸ், இப்போது இன்னும் அரை மணி நேரத்தில் நீ வீட்டுக்கு வராவிட்டால் உனது அப்பா, அம்மாவை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

வசந்தி

வசந்தி

வசந்தியும், மோசஸ் குடித்துவிட்டு ஏதோ உளறுகிறார் என நினைத்து போனை துண்டித்துவிட்டார். பின்னர் வசந்தியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று மோசஸ் அங்கிருந்த அவரது அப்பா, அம்மாவின் தலை, கழுத்து, முகம், தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதனிடையே வசந்திக்கு திடீரென மோசஸ் மீது சந்தேகம் ஏற்பட்டு தனது பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.

 போனை எடுக்கவில்லை

போனை எடுக்கவில்லை

அவர்கள் போனை எடுக்கவில்லை. இதையடுத்து தனது சகோதரனுக்கு போன் செய்த வசந்தி, தனது பெற்றோரை போய் பார்த்து வருமாறு கூறியுள்ளார். வசந்தியின் சகோதரனும் போய் பார்த்த போது பெற்றோர் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டை கொலை தொடர்பாக விசாரித்து வந்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடந்த 30ஆம் தேதி மோசஸும் மற்றொரு நபரும் இரு சக்கர வாகனத்தில் வசந்தியின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து போலீஸார் மோசஸையும் அவருடன் வந்தவரையும் கைது செய்தனர்.

English summary
Parents were killed by daughter's paramour in Chennai Chromepet. Police arrested 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X