சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசி கொடுமை.. மாஸ்க்கை விழுங்கி துடிதுடித்த நாய்.. ஆபரேஷன் செய்து உயிரை காப்பாற்றிய சென்னை டாக்டர்கள்

மாஸ்க்கை விழுங்கிய நாயை டாக்டர்கள் போராடி காப்பாற்றினர்

Google Oneindia Tamil News

சென்னை: மாஸ்க்கை விழுங்கிய நாய் ஒன்று உயிருக்கு போராடிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.. இதையடுத்து, டாக்டர்கள் ஆபரேஷன் செய்து நாயை காப்பாற்றிய மனிதநேய செயலும் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவதை கட்டாயம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மாஸ்க் அணிவதால், தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது.. அதனால், மக்களும் மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்..

இரட்டை மாஸ்க் அணிந்து மூதாட்டியிடம் 11 சவரன் கொள்ளை.. மாஸ்கை நீக்கி யாரென்று பார்த்தபோது அதிர்ச்சி இரட்டை மாஸ்க் அணிந்து மூதாட்டியிடம் 11 சவரன் கொள்ளை.. மாஸ்கை நீக்கி யாரென்று பார்த்தபோது அதிர்ச்சி

மாஸ்க்

மாஸ்க்

எனினும், தாங்கள் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கை முறையாக அப்புறப்படுத்தாமல் தெருக்களில், ரோடுகளில் தூக்கி வீசி எறிந்துவிடுகின்றனர். இப்படி வீசிவிடுவதால், அந்த மாஸ்க்கில் இருக்கும் தொற்று, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.. இதில் பல நேரங்களில் சிக்கி கொள்வது கால்நடைகள்தான்..

 சாப்பாடு

சாப்பாடு

தற்போது லாக்டவுன் என்பதால், மக்கள் வேலைகளுக்கு போக முடியாமல் உள்ளனர்.. இதனால் யார் கையிலும் காசு இல்லை.. சாப்பிடவும் வழியின்றி பலர் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், கால்நடைகளுக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை.. அந்த வகையில் ஒரு நாய் பசியால் இரை தேடி வந்துள்ளது.. அங்கிருந்த மாஸ்க்கை உணவென்று நினைத்து விழுங்கிவிட்டது..

 மருத்துவர்கள்

மருத்துவர்கள்

அந்த சைபேரியன் ஹஸ்கி வகையை சேர்ந்தது என்கிறார்கள்.. மாஸ்க் வயிற்றுக்குள் சென்றதும் உயிருக்கு போராடி உள்ளது.. இதை பார்த்த சிலர், எதற்காக நாய் வலியால் துடிக்கிறது என்று தெரியாமல், உடனடியாக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போதுதான் அந்த நாய் வயிற்றில் மாஸ்க் இருப்பது தெரியவந்தது.

ஆபரேஷன்

ஆபரேஷன்

இதை தொடர்ந்து நாயின் வயிற்றில் இருந்த மாஸ்க்கை ஆபரேஷன் செய்து எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.. அதனால், நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி, வயிற்றிலிருந்து மாஸ்க்கையும் ஆபரேஷன் செய்து அகற்றினர். இப்போது நாய் நலமுடன் உள்ளது... ஆனால் மக்கள் தான் மாற வேண்டி உள்ளது.. உபயோகித்த மாஸ்க்கை சாலையோரம் வீசாமல், குப்பை தொட்டியில் போடும் பழக்கத்தை இனியாவது தொடங்க வேண்டும்.

English summary
Chennai veterinarians rescued a dog after swallowing its mask
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X