வெளுத்து வாங்கும் வெயில்.. "தானாக தந்தூரி ஆகும்" கோழிகள்.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த ஆண்டு மக்கள் சென்னையில் மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் அதிகபட்சமாக 25 செமீ. மழை பதிவானது. ஏரிகள் நிரம்பி திடீரென திறக்கப்பட்டதால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தத்தளித்தனர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை பெருமளவு பெய்தாலும் அது போன்ற பெரிய பாதிப்பு இல்லை.
3 நாட்கள் வறுத்தெடுக்கப் போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் “எச்சரிக்கை”.. செய்ய வேண்டியவை! கூடாதவை!

கடும் தண்ணீர் தட்டுப்பாடு
இதனால் மக்கள் கடந்த 2019ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் தத்தளித்தனர். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலி குடங்களுடன் மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தினர். ஹோட்டல்கள், உணவகங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்களை நம்பி இருந்த மக்கள் அவதியடைந்தனர்.

லாரி மூலம் தண்ணீர்
சென்னையில் பெரும்பாலான மக்கள் லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கினர். பலர் வீடுகளை பூட்டிவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற நிலை ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டும் மழை பெய்த போதிலும் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பக்கம் வீசியது.

நீர் நிலைகள்
இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின. 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கனமழை பெய்ததால் மக்கள் 2015 வெள்ளத்தை நினைத்து அஞ்சினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஆனால் 2015 அளவுக்கு இல்லை என்றே சொல்லலாம். நவம்பர் மாதம் முதல் இரு நாட்களில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்கள் நிரம்பின.

வெயில் வாட்டி வதைக்கிறது
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் சதமடிக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் எல்லாம் இருக்கிறது. அதற்குள் இப்படியொரு வெயிலால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமா என்ற கேள்வி எழுந்தது.

தண்ணீர் பஞ்சம்
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இதனால் நடப்பு ஆண்டில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.