சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த இரண்டை தவிர எந்த கடையும் இயங்காது.. 2 ஞாயிறு அன்றும் முழு பூட்டு.. சென்னையில்..!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் 21ம் தேதி மற்றும் 28ம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவது சென்னையில் மிக மிக கடுமையாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்த அறிவிப்பில், "21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஞாயிறுகளில் முடக்கம்

ஞாயிறுகளில் முடக்கம்

அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

மருந்து கடைகள் மட்டும்

மருந்து கடைகள் மட்டும்

பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்குமட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

எதற்கும் அனுமதி இல்லை

எதற்கும் அனுமதி இல்லை

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.

கடுமையான கட்டுப்பாடு

கடுமையான கட்டுப்பாடு

கடுமையான கட்டுப்பாடு

வெளியே செல்ல முடியாது

வெளியே செல்ல முடியாது

பிரதமர் மோடி கடந்த மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்த ஊரடங்கு எப்படி இருந்ததோ அப்படித்தான் ஞாயிற்றுக்கிழமைகள் இனி சென்னைக்கு இருக்க போகிறது. மருந்து, பாலை தவிர வேறு எதுவும் வாங்க வெளியே செல்ல முடியாது. போனாலும் திறந்திருக்காது. மருத்துவக்குழு பரிந்துரையால் கடுமையான ஊரடங்கு சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி சென்னையில் கொரோனா கட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
chennai and 3 districts will seeing full lockdown upcoming sundays due to covid issue. 20.6.2020 and 22.6.2020 two days full lock down without relaxation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X