சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிதான் புது வளர்ச்சி அடையும்.. மீண்டு வரும் தலைநகர்.. சிங்கார சென்னைக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக மீண்டும் நிமிர்ந்து நிற்க தொடங்கி உள்ளது. விரைவில் சென்னை முழுமையாக தனனுடைய பழைய பார்மிற்கு சென்னை திரும்ப உள்ளது.

Recommended Video

    2035-ல் Chennai-க்கு பெரிய ஆபத்து வரும்.. வல்லுநர்கள் எச்சரிக்கை

    கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட லாக்டவுன் காரணமாக சென்னை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மும்பைக்கு அடுத்து இந்தியாவின் ஜிடிபிக்கு அதிக பங்களிப்பு தரும் இரண்டாவது பெரிய நகரம் சென்னைதான். ஆனால் சென்னையை லாக்டவுன் மொத்தமாக முடக்கி போட்டது.

    சென்னை இந்தியாவின் ஆட்டோமொபைல் ஹப்பாக செயல்படுகிறது. ஆனால் இந்த லாக்டவுன் பாதிப்பு காரணமாக சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

     100 பேருக்கு தொற்றை பரப்பிய ஒருவர்.. நடுக்கத்தில் ஊட்டி.. கட்டிக்காத்த கட்டுப்பாட்டுக்கு ஆபத்து! 100 பேருக்கு தொற்றை பரப்பிய ஒருவர்.. நடுக்கத்தில் ஊட்டி.. கட்டிக்காத்த கட்டுப்பாட்டுக்கு ஆபத்து!

    சென்னை பாதிக்க இரண்டு காரணம்

    சென்னை பாதிக்க இரண்டு காரணம்

    கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார ரீதியான சரிவை சென்னை சந்தித்து உள்ளது. அதிலும் சென்னையின் தொழிற் நிறுவனங்கள், சென்னையில் பொருளாதாரம் நலிவடைய இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் கொரோனா, இரண்டாவது காரணம் சென்னையில் இருந்து அதன் ஊழியர்கள் வெளியேறியது. இது இரண்டும் மிக முக்கியம் ஆகும்.

    கொரோனா

    கொரோனா

    சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மொத்தமாக மும்பைக்கு அடுத்து இந்தியாவில் மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரமாக சென்னை மாறியது. சென்னையில் அடுத்தடுத்து நிறைய கிளஸ்டர் உருவானது. பெங்களூர் ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்திய நிலையில், சென்னை தனது தரப்பில் தோல்வி அடைந்தது. இது பொருளாதார ரீதியான சரிவுக்கு பெரிய அளவில் வழி வகுத்தது.

    மோசம் அடைந்தது

    மோசம் அடைந்தது

    அதோடு நாளுக்கு நாள் நிலைமை மோசம் அடைந்தது. சென்னையில் இருந்து பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்கள், ஊழியர்கள் வெளியேறினார்கள். வரிசையாக நிறுவனங்கள் மூடப்பட்டது. இது எல்லாம் சேர்த்து சென்னையை புரட்டி போட்டது. இதனால் சென்னையின் முதலீடுகள் எல்லாம் பெங்களூருக்கு செல்லுமா என்று அச்சம் எழுந்தது. ஆனால் நிலைமை சென்னைக்கு சாதகமாக மாறியுள்ளது.

    பெங்களூர் நிலை

    பெங்களூர் நிலை

    தென் இந்தியாவில் சென்னைக்கு போட்டியாக இருக்கும் பெங்களூர், ஹைதராபாத் இரண்டும் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்க தொடங்கி உள்ளது. தென்னிந்தியாவின் புதிய கொரோனா ஹாட் ஸ்பாட்டாக பெங்களூர் மாறியுள்ளது. பெங்களூரில் கிட்டத்தட்ட சமூக பரவல் தீவிரம் அடைந்துவிட்டது. கொஞ்சம் கூட தொடர்பே இல்லாத நபர்களுக்கு பெங்களூரில் கொரோனா வர தொடங்கி உள்ளது.

    ஆனால் சென்னை

    ஆனால் சென்னை

    ஆனால் இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்பில் இருந்து சென்னை மீண்டும் வர தொடங்கி உள்ளது. பெங்களூர் இப்போதுதான் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறி உள்ள நிலையில், சென்னையில் கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. பெங்களூரை விட்டு தொழிலாளர்கள் யாரும் வெளியேற வேண்டாம், நாங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்று பெங்களூர் மேயர் வேண்டுகோள் விடுக்கும் அளவிற்கு நிலைமை பெங்களூரில் மோசமாகி உள்ளது.

    சூப்பர் சென்னை

    சூப்பர் சென்னை

    இன்னொரு பக்கம் சென்னை சரியான திட்டமிடல், வீடு வீடாக சோதனை செய்து கொரோனவை கட்டுப்படுத்தி உள்ளது. முன்பு சென்னையில் 5000 சோதனைகள் செய்தாலே 2000 கேஸ்கள் வரும். இந்த நிலையில் தற்போதெல்லாம் சென்னையில் 10 ஆயிரம் சோதனைகள் செய்தால் கூட, 1500+ கேஸ்கள் மட்டுமே வருகிறது. அதேபோல் சென்னையில் 60% பேர் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர்.

    நல்ல செய்தி 1

    நல்ல செய்தி 1

    சென்னைக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்றால் அது கொரோனா சரிவுதான். கண்டிப்பாக இந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு விடும் என்று கூறுகிறார்கள். முழுவதாக மீள வாய்ப்பு இல்லை என்றாலும் சென்னை பெரிய அளவில் மீண்டு வரும். பெங்களூர், ஹைதராபாத் இப்போதுதான் கொரோனா தொடக்கத்தில் உள்ள நிலையில் சென்னை அபாயகட்டத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நல்ல செய்தி 2

    நல்ல செய்தி 2

    அடுத்ததாக சென்னையை நோக்கி விரைவில் முதலீடுகள் வரும் என்று கூறுகிறார்கள் . பெங்களூர், ஹைதராபாத்தை விட சென்னையை நோக்கிதான் இனி அதிக முதலீடுகள் வரும் என்று கூறப்படுகிறது. இதில் தமிழக முதல்வரும் மிகவும் கவனமாக இருக்கிறார். முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி வருகிறார் . சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை முதல்வர் தமிழகம் வர அழைப்பு விடுக்கிறார்.

    என்ன நிறுவனங்கள்

    என்ன நிறுவனங்கள்

    உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களான "கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மற்றும் மேட்டல் இங்க்" நிறுவனங்களின் தலைமை அலுவர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட நேரடியாக முதல்வரே கடிதம் எழுதி உள்ளார். இனி மருந்து பொருட்களுக்கு அதிக தேவை இருக்கும் என்பதால் அதிலும் சென்னை கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அக்யூரே, சீமென்ஸ் உள்ளிட்ட 8 முன்னணி மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை மீண்டு வரும்

    சென்னை மீண்டு வரும்

    சென்னை எப்படி ஒரு காலத்தில் ஆட்டோமொபைல் ஹப்பாக இருக்கிறதோ அதேபோல் இனி வரும் நாட்களில் மருந்து உற்பத்தியின் ஹப்பாக மாறும் என்று கூறுகிறார்கள். இது மாயாஜாலம் போல உடனே நடக்காது. ஆனால் குறைந்தது 2 வருடங்களில் இந்த முக்கிய மாற்றம் நடக்க போகிறது என்று கூறுகிறார்கள். இதேபோல் விமான துறை மீது சென்னை கவனத்தை குவித்து இருக்கிறது. யுனெடெட் டெக்னாலஜி, ஜெனரல் எலக்ட்ரிக், போயிங், லாக்ஹூட் மார்டின், சாப்ரான்ரோல்ஸ் ராய்ஸ், ஏர்பஸ், லியானார்டோ, ஹனிவெல் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    யாரும் இல்லை

    யாரும் இல்லை

    மும்பை, ஹைதராபாத், பெங்களூர் கொரோனாவில் திணறுகிறது. இனி ஐடி உலகில் பெரிய எதிர்காலம் இல்லை. இதனால் உற்பத்தி துறையிலும், மருத்துவ துறையிலும் சென்னையின் கவனம் திருப்பப்பட்டு உள்ளது. இதனால்தான் மருத்துவ நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடனே மாற்றம் இல்லை என்றாலும் வரும் மாதங்கள் சென்னை பெரிய அளவில் முன்னேற்றம் அடைய போகிறது என்கிறார்கள்.. புயல், வெள்ளம், கொரோனா அனைத்தையும் பார்த்த சென்னை.. கண்டிப்பாக மீண்டு வரும்!

    English summary
    TN Capital Chennai will soon reclaim its position in South India as an economic hub.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X