சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அப்பா அம்மா மன்னிச்சிடுங்க.. நிறைய ஏமாந்துட்டேன்".. ஆன்லைன் சீட்டு விளையாடி.. கடைசியில் தற்கொலை!

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைனில் சீட்டு விளையாடி, அதுல ஆயிரக்கணக்கான பணத்தையும் இழந்துவிட்டார் நித்திஷ் என்ற இளைஞர்.. இதை அவரால் தாங்கி கொள்ள முடியாமல், "அப்பா, அம்மா ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க" என்று லெட்டர் எழுதி வைத்து விட்டு தற்கொலையும் செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரையில் ஒரு டாட்டூ கடை செயல்பட்டு வருகிறது... ரொம்ப ஃபேமஸ் ஆன கடை இது.. இங்கு தான் நித்திஷ் வேலை பார்த்து வந்தார்.. அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசுக்க தகவல் கிடைத்தது.. உடனடியாக விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணையையும் தொடங்கினர்.

 chennai youth commits suicide after losing money in online game

நித்திஷ், ஒரு தனியார் காலேஜில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.. இப்போது ஊரடங்கு என்பதால் காலேஜ் மூடப்பட்டுள்ளது.. அதனால் டாட்டூ கடையில் வேலை பார்த்து வந்தார்.. அப்போது ஆன்லைன் கேம்களை நிறைய விளையாடி வந்துள்ளார்.

குறிப்பாக பப்ஜி, ரம்மி, உள்ளிட்ட காசு வைத்து விளையாடும் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறார்.. இப்படி பணம் வைத்து விளையாடி, ஏற்கனவே 20 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்... இதைதவிர சேர்த்து வைத்திருந்த மற்ற பணத்தையும் இந்த விளையாட்டிலேயே போட்டுள்ளார்.. எல்லா காசையும் இழந்துவிட்டார்.. ஒரு கட்டத்தில் கையில் காசு இல்லாமல் போகவும், அந்த விளையாட்டை விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

"காப்பாத்துங்க.. காப்பாத்துங்க".. வாட்ஸ்ஆப்பில் கதறிய பெண்.. அடுத்து நடந்த பயங்கர விபரீதம்!

அதனால், வேலை பார்த்த கடையிலிருந்தே பணத்தை எடுத்து விளையாட்டில் செலவு செய்தார். இதனால் கடை ஓனர் பணத்தை கேட்டும், அதை திருப்பி தர முடியவில்லை.. இதனால் மன உளைச்சலிலேயே இருந்த நித்திஷ், இளைஞர், அதே கடையில் தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.

இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தது.. மேலும் தற்கொலைக்கு முன்பு ஒரு லெட்டர் எழுதி வைத்திருக்கிறார்.. அதில் "என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை.. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை பறி கொடுத்துட்டேன்.. அப்பா, அம்மா, கடை ஓனர் என்னை மன்னிச்சிடுங்க" என்று எழுதி வைத்துள்ளார்.. இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

மாணவர்கள், இளைஞர்களை மெல்ல மெல்ல கொன்று வருகிறது இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள்.. விளையாட்டில் மூழ்கிவிடுவதால், அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் ஈரோட்டில் நடந்தது.. இதெல்லாம் அநியாய மரணங்கள்.. டிக்டாக் மாதிரி இதற்கெல்லாம் தடை விதித்தாலும் நல்லாதான் இருக்கும்!

English summary
chennai youth commits suicide after losing money in online game
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X