சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேஸ்புக்கில் பெண்ணுடன் பழகி ஏமாற்றி பணத்தை கறந்த இளைஞன்.. பல பெண்களிடம் கைவரிசை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் பேஸ்புக் மூலம் நட்புடன் பழகி பெண்ணிடம் கடனாக தருமாறு ரூ.2.75 லட்சம் வரை வாங்கி இளைஞர் மோசடி செய்துள்ளார். இதேபோல் பல பெண்களிடம் அவர் மோசடி செய்திருப்பது விசாரணையில் வந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்தவர் பிரவீன் கடலோயா (49) என்பவர் வேப்பேரி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.

Chennai youth heated Rs 2.75 lakh from a woman through Facebook

அவர் தனது புகார் மனுவில் "மனைவி ராக்கி கடலோயாவிடம் சூளை ஹன்டர்ஸ் சாலையை சேர்ந்த திலீப் (28) என்ற இளைஞர் அறிமுகம் ஆனார். பின்னாளில் நண்பர்களாக பழகி எனது குடும்பத்தினரிடம் அறிமுகமாகி நன்றாக பழகினார்.

புதிதாக வியாபாரம் செய்ய பணம் தேவை என்று என் மனைவியிடம் கேட்டுள்ளார் கடனாக ரூ.2.75 லட்சம் கேட்டுள்ளார். என் மனைவியும் கடந்த ஜனவரி 20ம் தேதி திலீப்புக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த நபர் அதன் பிறகு போனை எடுக்காமல் புறக்கணிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் திலீப் போனை எடுக்காமல் துண்டித்தார். எனவே அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தியிருந்தார்.

பல நாளாக தூர்நாற்றம் வீசிய கழிவுநீர் தொட்டி.. சுத்தம் செய்ய முன்வந்த 2 இளைஞர்கள்.. பரிதாபமாக மரணம்பல நாளாக தூர்நாற்றம் வீசிய கழிவுநீர் தொட்டி.. சுத்தம் செய்ய முன்வந்த 2 இளைஞர்கள்.. பரிதாபமாக மரணம்

இதையடுத்து வேப்பேரி. போலீசார் நேற்று முன்தினம் இரவு திலீப்பை கைது செய்தார்கள். விசாரணையில் திலீப் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து திலீப்பிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
In Chennai, a youth has cheated Rs 2.75 lakh from a woman who is used to being friendly through Facebook. Similarly He has been under investigation for cheating on several women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X