சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது முத்தம் கொடுப்பியா.. நூதன தண்டனை அளித்த போலீஸை அதிர வைத்த இளைஞன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி அநாவசியமாக வெளியூர் சுற்றும் இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்து வருகிறார்கள் அப்படி மதுரவாயல் ஏரிக்கரை போலீசார் இளைஞர் ஓருவருக்கு நூதன தண்டனை அளித்த போது அந்த இளைஞர் முத்தம் கொடுப்பேன் என்று உளறினார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    என்னது முத்தம் கொடுப்பியா.. நூதன தண்டனை அளித்த போலீஸை அதிர வைத்த இளைஞன் - வீடியோ

    உலகத்தையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

    chennai youth says gives kiss, in police after curfew break down

    தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்பபடுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை இதுவரை எச்சரித்து வந்த போலீசார் கடந்த சில நாட்களாக வாகனத்தை பறிமுதல் செய்து அபாராதமும் விதித்து வருகிறது.

    அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளது. பல லட்சங்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் அநாவசியமாக சுற்றுவது குறையவில்லை. இதனால் சில இடங்களில் போலீசார் , உறுதி மொழி ஏற்க வைப்பது, தோப்பு கரணம் போடவைப்பது, உள்ளிட்ட நூதன தண்டனைகளையும் வழங்குகிறார்கள்.

    chennai youth says gives kiss, in police after curfew break down

    அப்படித்தான் சென்னை மதுரவாயல் ஏரிக்கரை போலீசார் வெளியில் பைக்கில் சுற்றிய இளைஞர்களை பிடித்து வைத்து இனிமேல் இப்படி சுற்றமாட்டேன் , அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உறுதி மொழி ஏற்க வைத்தனர். அப்போது ஒரு இளைஞர் முத்தம் கொடுப்பேன் என்று உளறினார். அவரை ஓரமாக போய்நில் என்று சொல்லி மீண்டும் பேச வைத்து எச்சரித்து அனுப்பினர். இந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    chennai youth says gives kiss, who advised and punishment by police after curfew break down
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X