சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிந்தாமல் சிதறாமல்.. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும்.. கண்ணாடி கிளாஸில் இறக்கிய இளைஞர்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை இளைஞரின் திகைக்க வைக்கும் டம்ளர் வித்தைக்கு பாராட்டுகள் குவிகின்றன. அப்படி என்ன செஞ்சுட்டாரு. வாங்க பார்க்கலாம்.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு டம்ளர்களில் நீரை நிரப்பி, கயிற்றில் வைத்து சுழற்றுகிறார். அப்படி சுழற்றும்போது, ஒரு சொட்டு நீர் கூட வெளியே விழாமல் அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 Chennai youth spins glasses of water without spilling; video goes viral

இது மேஜிக் என்று கூறுவதா, பூமியின் ஈர்ப்பு என்று கூறுவதா என்றெல்லாம் நீங்கள் குழம்பிக் கொள்ள வேண்டாம். இது வெறும் டிரிக்ஸ்தான். சுழற்றும்போது டம்ளரில் இருக்கும் தண்ணீர் கீழே விழாமல் இருப்பது சிறிய இயற்பியல் தத்துவத்தை உணர்த்துவதாகவும் இருக்கிறது.

கடந்த மாதம் சென்னையைச் சேர்ந்த சரத் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ஒரு மாதத்திற்குப் பின்னர்தான், 'Physics & Astronomy Zone' என்ற ட்விட்டர் தளம் இந்த வீடியோவை தனது தளத்தில் வெளியிட்டு 'இயற்பியல் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது' என்று பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவை 'Physics & Astronomy Zone' என்ற டிவிட்டர் தளத்தில் நேற்றுதான் (ஜூலை 2ஆம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. அதற்குள் தற்போது வரை 81.6K லைக்ஸ் கிடைத்துள்ளது. 20.6K முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டரில் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். சரத் சென்னையில் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் என்றும், அங்கு இருக்கும் இளைஞர்களுக்கு இந்த வித்தைகளை கற்றுக் கொடுக்கிறார் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

சிலர் இயற்பியலின் வியப்பூட்டும் காட்சி என்று பெருமைப்பட பதிவிட்டுள்ளனர். இந்த வித்தையை மந்தநிலை, மையவிலக்கு விசை என்றும் அமெரிக்காவின் அறிவியல் நாளிதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்கள் தங்களது முன்னோர்களிடம் இருந்து இந்தக் கலைகளை கற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்துதான் அனைத்து தத்துவங்களும் பிறந்தன என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். 'அமேசிங் இந்தியா' என்றும் புகழ்ந்துள்ளனர்.

மலச்சிக்கல், நெஞ்சு சளியா?.. 4 அக்குபிரஷர் பாயிண்ட்ஸை பயப்படாம தூண்டுங்க.. சொல்கிறார் டாக்டர் தீபாமலச்சிக்கல், நெஞ்சு சளியா?.. 4 அக்குபிரஷர் பாயிண்ட்ஸை பயப்படாம தூண்டுங்க.. சொல்கிறார் டாக்டர் தீபா

காரில் வளைவில் வேகமாக செல்லும்போது, நாம் அணிந்து கொண்டு இருக்கும் பெல்ட் மற்றும் இருக்கையின் உராய்வு எவ்வாறு நம்மை காருடன் சேர்த்து ஈர்க்கிறதோ அதேபோன்றுதான் டம்ளரில் இருக்கும் தண்ணீரை சுழற்றும்போது ஏற்படுகிறது என்று அறிவியல் நாளிதழில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இது மையவிலக்கு விசை என்று அழைக்கப்படுகிறது.

English summary
Chennai Man swings glasses of water without spilling; netizens amazing
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X