சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டுமல்ல.. மரணமும் கிடுகிடு உயர்வு.. வெளியானது லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2446 பேரும், கோடம்பாக்கத்தில் 1678 பேரும், தேனாம்பேட்டையில் 1500 பேரும், திருவிக நகரில் 1437 பேரும், தண்டையார் பேட்டையில் 1425 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில். சென்னையில் நேற்று ஒரு நாளில்மட்டும் 618 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

தண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம! தண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம!

 13362 பேருக்கு பாதிப்பு

13362 பேருக்கு பாதிப்பு

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13362 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6869பேர் குணம் அடைந்துவிட்டனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர். 6300 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் அதிகம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மற்றும் குணம் அடைந்தவர்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. திருவெற்றியூர்: 414, மணலி: 190, மாதவரம் 298, தண்டையார் பேட்டை 1425. இராயபுரம் 2446, திரு.வி.க.நகர் 1437, அம்பத்தூர் 539, அண்ணா நகர் 1143, தேனாம்பேட்டை 1500, கோடம்பாக்கம் 1678 , வளசரவாக்கம் 816, ஆலந்தூர் 188, அடையாறு 745, பெருங்குடி 266, சோழிங்கநல்லூர் 233. பிறமாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 84.

எங்கு அதிகம்

சென்னையில் எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம், எத்தனை பேர் தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளார்கள், மரணம் அடைந்தவர்கள் விவரத்தையும் சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 1150 பேர் கொரோனா தொற்றுடன் சிகிக்சை பெற்று வருகிறார்கள். அங்குதான் அதிகபட்சமாக 1268 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இருமண்டலத்தில் 49 பேர் மரணம்

இருமண்டலத்தில் 49 பேர் மரணம்

கோடம்பாக்கத்தில் 1050 பேர் குணம் அடைந்த நிலையில் 620 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். திருவிகநகரில் 783 பேர் குணம் அடைந்த நிலையில் 633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். தேனாம்பேட்டையில் 759 பேர் குணம் அடைந்த நிலையில் 727 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். வளசரவாக்கத்தில் 508 பேர் குணம் அடைந்த நிலையில் 308 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். தண்டையார் பேட்டையில் 614 பேர் குணம் அடைந்த நிலையில் 798 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையில் ஒட்டுமொத்தமாக 109 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக இராயபுரத்தில் 28 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் 21 பேரும் உயிரிழந்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 9 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

English summary
chennai zone wise breakup of covid 19 positive cases as on 30 th may: chennai corporation released on twitter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X