சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3000த்தை தொட்ட ராயபுரம், சென்னையில் நாளுக்கு நாள் மோசமாகும் கொரோனா பாதிப்பு.. வெளியான லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 967 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15770 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 1ம் தேதி நிலவரப்படி 23495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 15770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8136 பேர் குணம் அடைந்துள்ளனர். 128 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ள 7387 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

chennai zone wise breakup of covid 19 positive cases as on june 2

சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவிநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. குறிப்பாக இராயபுரம் மண்டலத்தை பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தண்டையார் பேட்டை, கோடம்பாக்கத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் ஏன்.. முதல்வர் பழனிச்சாமி பரபரப்பு பேச்சு சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் ஏன்.. முதல்வர் பழனிச்சாமி பரபரப்பு பேச்சு

ஜூன் 2ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

திருவெற்றியூர்: 534

மணலி: 222

மாதவரம் 378

தண்டையார் பேட்டை 1869

இராயபுரம் 2935

திருவிக நகர் 1651

அம்பத்தூர் 587

அண்ணா நகர் 1341

தேனாம்பேட்டை 1770

கோடம்பாக்கம் 1867

வளசரவாக்கம் 890

ஆலந்தூர் 229

அடையாறு 883

பெருங்குடி 263

சோழிங்கநல்லூர் 262

ஜூன் 2ம் தேதி காலை நிலவரப்படி எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

English summary
Chennai COVID 19 on june 2: Details of Zonal wise cases details, rayapuram 2935 cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X