சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம்.. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா அறிகுறியுடன் வருவோருக்கு தனி பாதை

Google Oneindia Tamil News

சென்னை: அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா அறிகுறி உள்ளோருக்கு தனிப் பாதையை ஏற்படுத்த, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சென்னை நகரில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். அதிலும் வார்டு வாரியாக எடுத்து பார்த்தால், சில மண்டலங்கள், பல மாவட்டங்களின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கின்றன.

அதிலும் முதலிடத்தில் இருப்பது ராயபுரம் மண்டலம். அங்கு 1981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில், 1460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீர் பரபரப்பு.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக.. துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை மருத்துவமனையில் அனுமதி!திடீர் பரபரப்பு.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக.. துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

குறைந்த இடம்

குறைந்த இடம்

திருவிகநகர் மண்டலத்தில் 1188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார் பேட்டை 1044, அண்ணாநகர் 867 என்ற வகையில் உள்ளது. சென்னையில் இருப்பதிலேயே, குறைவாக நோயாளிகள் உள்ள மண்டலம் ஆலந்தூர். அங்கு 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய விதிமுறை

புதிய விதிமுறை

இதனிடையே, கொரானா பாதிப்புடன் வருபவர்களுக்கு, அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தனி பாதையை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை அமைச்சக பரிந்துரையை குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா நோயாளிகளுக்காக புதிய நடைமுறையை பின்பற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருமிநாசினி

கிருமிநாசினி

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் அமரும் அறை, காத்திருப்போர் அமரும் இருக்கைகள், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

English summary
Chennai zone wise corona cases list is comes out, Alandur is less affected area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X