சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வெறும் 11 சதவீதம் பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோடம்பாக்கம், அம்பத்தூரில் மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது. மற்ற இடங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விட்டது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 989 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேநேரம் 1061 பேர் குணம் அடைந்தனர். இதனால் நேற்று முன்தினம் 11738 ஆக இருந்த ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து 11654 ஆக மாறியது.

கொரோனா பீதி மக்களை வாட்டி வதைக்கிறது... விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தோல்வி -கே.எஸ்.அழகிரி கொரோனா பீதி மக்களை வாட்டி வதைக்கிறது... விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தோல்வி -கே.எஸ்.அழகிரி

இதுவரை 2302 பேர் உயிரிழப்பு

இதுவரை 2302 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று ஒரு நாளில் 12 பேர் மட்டுமே இறந்தனர். ஆனால் சென்னையைவிட கோவையில் அதிகமாக 13 பேர் இறந்தனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2302 பேர் இறந்தனர்.

சோதிக்கப்பட்டவர்கள்

சோதிக்கப்பட்டவர்கள்

சென்னையில் இதுவரை 1,09.117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 95,161 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து விட்டனர். தற்போது 11,654 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று சென்னையில் ஒரு நாளில் மட்டும் 12,792 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

2வது இடம் கோடம்பாக்கம்

2வது இடம் கோடம்பாக்கம்

சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் அம்பத்தூர் முதலிடத்திலும் கோடம்பாக்கம் 2வது இடத்திலும் இருக்கிறது. அண்ணா நகர் மூன்றாம் இடத்திலும், அடையாறு நான்காவது இடத்திலும் உள்ளது.

சென்னை கொரோனா விவரம்

சென்னை கொரோனா விவரம்

சென்னையில் மண்டல வாரியான ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையையும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையையும் இப்போது பார்ப்போம். குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அடைப்புகுறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • திருவெற்றியூர் 372 (3436)
  • மணலி 85 (1691)
  • மாதவரம் 452 (3170)
  • தண்டையார்பேட்டை 614 (9184)
  • இராயபுரம் 802 (10806)
  • திரு.வி.க.நகர் 805 ( 7652)
  • அம்பத்தூர் 1506 (5312)
  • அண்ணா நகர் 1273 (10898)
  • வளசரவாக்கம் 779 (5351)
  • ஆலந்தூர் 532 (3070)
  • அடையாறு 923 (6872)
  • பெருங்குடி 465 (2779)
  • சோழிங்கநல்லூர் 464 (2264)
  • பிற மாவட்டங்கள் 305 (1467)
  • சென்னையில் மொத்தம் குணம் அடைந்தவர்கள்: 9,561
  • குணம் அடைந்தவர்கள் விகிதம் : 87 சதவீதம்
  • சென்னையில் பாதிப்புடன் உள்ளவர்கள்: 11,654
  • பாதிப்பு விகிதம் 11 சதவீதம்
  • மொத்தம் இறந்தவர்கள் 2,302
  • இறப்பு விகிதம் : 2.11 சதவீதம்

English summary
Chennai zone wise corona cases list is comes out, ambattur and kodambaakam mostly affected area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X