சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்கிறது... மகிழ்ச்சி பொங்குகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai Rain: சென்னையை முத்தமிட்ட முதல் மழை- வீடியோ

    சென்னை: சென்னையில் காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழை பெய்தது. மழையோடு, மண் வாசம் வீசியது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    கடும் வெயிலிலிருந்து தப்பிக்கவும், குடிநீர் பஞ்சத்தில் இருந்து மீளவும், மழையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு திடீரென்று இன்று மழை பெய்ததால், வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.

    #chennairains Trending on Twitter: peoples Are Enjoy

    சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், மக்கள் தவித்து போயினர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த நிலையில், இன்று சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தரமணி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து இதமான காற்றுடன் பெய்த மழையால் மக்கள் மனம் குளிர்ந்தது. வெப்பமும் தணிந்தது. மழை நீரைக் கண்ட சிறுவர்கள், உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் கனமழை பெய்தது. கனமழையால் சாலை ஓரம் தண்ணீர் தேங்கியது.

    இதனை சமூகவலைதளங்களில் #chennairains என்ற ஹேஷ் டேக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர். பலர் மழையை வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அய்யோ பாத்துட்டேன்...பாத்துட்டேன் "மழைய" பாத்துட்டேன்...அடேய்ய்...பாத்தது நீதானா..நீ பாத்தேன்னு சொன்னா எவனாது நம்புவானா. என்று பதிவிட்டுள்ளார்.

    மழை நல்ல இருக்கியா மழை என்று வடிவேல் ஸ்டைலில் கேட்பது போல், மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

    அதே நேரம், அரசை நீர்நிலைகளை பாதுகாக்க சொல்வது போல், நாமும் நீரை சேமிப்போம் என்றும் சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

    English summary
    After 6 months,rain in Chennai, happiness is high Level
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X