சென்னைக்கு மீண்டும் வரும் ஃபோர்டு..மறைமலை நகரில் இருந்து உலகத்திற்கு பறக்க போகும் சூப்பர் விஷயம்
சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, மறைமலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் உற்பத்தி ஆலையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும், மீண்டும் கார்களை மறைமலை நகர் ஆலையில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு திட்டங்களை இறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மறைமலை நகரில் ஃபோர்டு ஆலை மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து அண்மையில் தமிழக அரசிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்தார். தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வந்த ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு. ஃபோர்டு நிறுவனம் இடையே இருந்து வந்த 30 ஆண்டுகால உறவைப் புதுப்பிக்கும் வகையில் மறைமலை நகரில் மீண்டும் தொழிற்சாலை இயக்கப்படும் என கடந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, ஃபோர்டு நிறுவனம், ஆலையை மீண்டும் இயக்குவதற்கு இசைவாணை கோரி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தது. தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இசைவாணையை 2028 மார்ச் 31 வரை புதுப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மறைமலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் உற்பத்தி ஆலையை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிட போகிறதாம் ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு சென்னை ஆலையில் இன்ஜின்களை தயாரிக்கப் போகிறது என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி மறைமலைநகர் சென்டரை உலகளாவிய கார் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திக்காக மீண்டும் பயன்படுத்தவும், இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு இன்ஜினை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஃபோர்டு 2021ம் ஆண்டு இந்தியாவில் வாகன உற்பத்தியை நிறுத்தியது. அதன்பின்னர் 2022ம் ஆண்டு மொத்தமாக வெளியேறியது . தெற்காசிய வாகன சந்தையில் அதன் 25 ஆண்டுகளாக சந்தையில் முக்கியமான பங்கு வகித்த ஃபோர்டு நிறுவனம் சென்னையில் ஆலையை நிறுத்தியது தமிழக வாகன ஆர்வலர்கள் பலரையும் கவலைக்குள்ளாக்கியது.
சென்னை மறைமலைநகர் ஆலையை மீண்டும் நடத்துவது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. சமீபத்திய ஊகங்கள் ஃபோர்டு அதன் இந்தியத் திட்டங்களைக் கைவிடக்கூடும் என்றே கூறின. குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டு உற்பத்தி முயற்சிகள் மற்றும் இறக்குமதி வரிகளை அமல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு ஆலையை மூடுவதற்கே வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக "ஃபோர்டின் மூத்த நிர்வாகிகள் இன்ஜினை மட்டும் தயாரிப்பது என்று முடிவுக்கு வந்துள்ளார்களாம். ஏற்றுமதி சார்ந்த திட்டங்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், முறையான அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஃபோர்டின் இந்திய டீலர்ஷிப் நெட்வொர்க் மூடப்பட்டதால், அது ஏற்றுமதியில் மட்டுமே கவனம் செலுத்தும் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications