சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு கொரோனா உறுதி.. சென்னையில் சிகிச்சை

Google Oneindia Tamil News

சென்னை: செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்டி அரசுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நேற்றைய தினம் ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இல்லாத அளவாக நேற்று இரண்டாவது தினமாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது.

Cheyyur DMK MLA Arasu infected with Coronavirus

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆயிரமாகும். சென்னையில் மட்டும் நேற்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஆர்டி அரசு. இவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதியானது.

Recommended Video

    சாத்தான் குளம் தந்தை மகன் மரணம் : ஸ்டாலின் உருக்கம் | 25 லட்சம் திமுக நிதி உதவி

    முன்பு சீனா.. இன்று கொரோனாவிடம் சரணடைந்து விட்டார் மோடி.. ராகுல் காந்தி போட்ட அதிரடி டிவீட்முன்பு சீனா.. இன்று கொரோனாவிடம் சரணடைந்து விட்டார் மோடி.. ராகுல் காந்தி போட்ட அதிரடி டிவீட்

    இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பல் மருத்துவர் ஆவார். சென்னை வளசரவாக்கத்தில் இவருக்கு கிளீனிக் உள்ளது. ஏற்கெனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ஆம் தேதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cheyyur DMK MLA Arasu infected with Coronavirus and he is admitted in Chennai hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X