சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் தொழில்நுட்பம்...சிஏஜி அறிக்கை...அரசுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்...ப.சிதம்பரம் ட்வீட்!!

Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு உண்மைகளையும், பல்வேறு சர்ச்சைகளையும் வெளி கொண்டு வரும் வகையிலும், கிளப்பும் வகையிலும் ரபேல் விஷயத்தில் சிஏஜியின் அறிக்கை அமைந்துள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதிவு செய்து இருக்கிறார்.

இதுகுறித்து சிதம்பரம் இன்று தனது ட்விட்டர் பதிவில், ''ரபேல் விமானத்தின் விற்பனையாளர்கள் தொழில்நுட்பத்தை ஒப்பந்தத்தின்படி இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் vs சுபாஷ் பண்ணையார்... டிஸ்யூம்... டிஸ்யூம்... பின்னணி என்ன..?அனிதா ராதாகிருஷ்ணன் vs சுபாஷ் பண்ணையார்... டிஸ்யூம்... டிஸ்யூம்... பின்னணி என்ன..?

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

தொழில்நுட்பங்களை 23-9-2019 அன்று தொடங்கியிருக்க வேண்டும். முதலாமாண்டு ஒப்பந்தத்தை 23-9-2020 ஆம் தேதிக்குள் முடித்து இருக்க வேண்டும். அந்த நாள்தான் நேற்று. ஆனால், இன்னும் முடிக்கப்படவில்லை. ஆனால், அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று மத்திய அரசால் கூறமுடியுமா?

சிக்கல்

சிக்கல்

தற்போது இந்த அறிக்கையின் மூலம் பல்வேறு உண்மைகளும், சர்ச்சைகளும் ஏற்பட இருக்கிறது. மேலும், மேலும் சிக்கல்கள் ஏற்பட இருக்கிறது. இதையும் அரசு மூடி மறைக்குமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டசால்ட் ஏவியேஷன்

டசால்ட் ஏவியேஷன்

ரபேல் விமானம் மற்றும் அதில் பொருத்தப்படும் ஏவுகணை தொடர்பான உயர் தொழில்நுட்பங்களை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்கு பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் எம்.பி.டி.ஏ வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரைக்கும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை என்ற தகவலை சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது

36 ரபேல்

36 ரபேல்

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் எம்.பி.டி.ஏ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016ல் ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. அதன்படி தற்போது வரைக்கும் 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விமானங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்களை வழங்கவில்லை என்று சிஏஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை வைக்கப்பட்ட சிஏஜி (மத்திய தலைமை கணக்குத் தணிக்கை) அறிக்கையில், ''பிரான்ஸ் நாட்டின் இரண்டு நிறுவனங்கள் கடந்த 2015, செப்டம்பரில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்கு வழங்க வேண்டிய தொழில்நுட்பங்களையும், ஏவுகணை தொழில்நுட்பங்களையும் வழங்கவில்லை.

இந்தியா

இந்தியா

பிரான்ஸ் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பங்களை கொடுக்காத காரணத்தினால், இந்தியாவில் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரபேல் விமான தொழில்நுட்பங்களை பெறுவது தொடர்பான கொள்கை மற்றும் அமலாக்கம் குறித்து, பாதுகாப்புத்துறை மறுஆய்வு செய்யவேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Chidambaram comments CAG report on Rafale says the opening of a can of worms?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X