சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசில் ப.சிதம்பரம் லாபி ஒர்க் அவுட் ஆகிறதா? நிர்மலா சீதாரமனுக்கு குருமூர்த்தி கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக-வை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலிஆடு!

    சென்னை: வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்சாவுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பல்வேறு வழக்குகள், புகார்களை எதிர்கொண்டிருக்கும் நிதி அமைச்சகத்தின் 12 உயர் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பி அதிரடி காட்டினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நடவடிக்கைக்குள்ளானவர்களில் வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்சாவும் ஒருவர்.

    Chidambaram, NDTV lobbies work in Modi govt? asks Gurumurthy

    ஸ்ரீவத்சா மீது பாலியல் புகார்கள், ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஆனால் இவை அனைத்தும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் தூண்டுதலால் போடப்பட்டவை; இதை நம்பி நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்துவிட்டார் என கொதித்துப் போய் ட்விட்டரில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருந்தார்.

    மேலும் ஸ்ரீவத்சா மீதான 3 வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமியைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் ஸ்ரீவத்சாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் பொங்கியுள்ளார்.

    அதில், "ஸ்ரீவத்சா மிகவும் நேர்மையான மனிதர்; துணிச்சல் மிக்க வருமான வரித்துறை ஆணையாளர்; என்.டி.டி.வி சேனலின் நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர்; அதேபோல் ப. சிதம்பரத்துக்கு எதிராக 15 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த அரசிலும் ப.சிதம்பரம், என்.டி.டிவி. லாபி வேலை செய்கிறதா? என கொட்டித் தீர்த்துள்ளார் குருமூர்த்தி.

    மேலும் ஸ்ரீவத்சாவுக்கு ஆதரவாக ட்வீட்டுகளை தொடர்ச்சியாக ரீ ட்வீட்டும் செய்து வருகிறார் குருமூர்த்தி. இப்பதிவுக்கு எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நிர்மலா சீதாராமன் நேர்மையாகவே செயல்பட்டிருக்கிறார்; நடவடிக்கை எடுத்திருக்கிறார் என குருமூர்த்திக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். அப்போது வேட்புமனுவில் பல தகவல்களை கார்த்தி சிதம்பரம் மறைத்ததாக பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியவர் ஸ்ரீவத்சவா. தற்போதைய லோக்சபா தேர்தலிலும் சிவகங்கை தொகுதியில் முகாமிட்டு ப.சிதம்பரம் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருந்தார் ஸ்ரீவத்சவா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Thuglak Editor Gurumurthy has supported to IT Commissioner Shrivastava who was sacked by Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X