சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு நினைவிடத்தில் சிலை... இ.பி.எஸ். நடவடிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவருடைய சிலையை நிறுவ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு சிலை நிறுவும் பணிகளும் தொடங்க உள்ளன.

இதற்கான பொறுப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு?+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு?

கட்டுமானப் பணி

கட்டுமானப் பணி

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரினா கடற்கரையில், அவருக்கு பிரமாண்ட நினைவிடத்தை கட்டி வருகிறது தமிழக அரசு. இதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஜெயலலிதாவின் சிலையை நிறுவவும் அரசு முடிவெடுத்துள்ளது.

முதல்வர் உத்தரவு

முதல்வர் உத்தரவு

ஜெயலலிதாவின் சிலை அதிமுக தலைமைக்கழகத்தில் மட்டுமே சென்னையில் உள்ளது. மற்ற இடங்களில் இதுவரை ஜெயலலிதாவின் சிலை நிறுவப்படவில்லை. இந்நிலையில் அவரது நினைவிட வளாகத்திலேயே புதிய சிலையை அமைக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

விரைந்து பணி

விரைந்து பணி

ஜெயலலிதா நினைவிடத்தை விரைவில் திறந்து வைக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகள் அடிக்கடி கட்டுமானப் பணிகளை நேரில் கண்காணித்து அது தொடர்பாக முதலமைச்சரிடம் விளக்கி வருகின்றனர்.

அச்சு அசலாக

அச்சு அசலாக

அதிமுக தலைமைக்கழகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலையில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டதால், இந்த முறை சிலை அச்சு அசலாக வடிக்க வேண்டும் என்பதில் முதல் உறுதியாக இருக்கிறார்.

English summary
Chief Minister edappadi palanisami steps into statue of Jayalalitha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X