சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரணகளத்திலும் கலகலப்பாக.. 65 வயதை எட்டிய முதல்வர் பழனிச்சாமி.. நாளை கொண்டாட்டம்

நாளை தமிழக முதல்வர் தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நாளை பர்த்டே.. 65 வயதை கடக்க போகிறார்! அதற்கான வாழ்த்துக்கள் இப்போதே தென்பட ஆரம்பித்துவிட்டன!

முதல்வராக பொறுப்பேற்று முதல் பிறந்த நாளை போன வருடம் முதல்வர் கொண்டாடினார். ஆனால் ரொம்ப ஆடம்பரம் எல்லாம் இல்லை. விழா எதுவும் நடத்தவில்லை, கொண்டாட்டமும் இல்லை!

காரணம் அன்றைய நிலைமை அப்படி இருந்தது. தடுமாற்றமான அரசியல் சூழல்.. ஒரு பக்கம் தினகரன், மறுபக்கம் ஸ்டாலின் என மிரண்டு கிடந்தார்.

புதுவையின் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. நாராயணசாமி உறுதி புதுவையின் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. நாராயணசாமி உறுதி

செல்போனில் வாழ்த்து

செல்போனில் வாழ்த்து

இன்னும் சொல்லப்போனால் எதிர்கட்சிகளால் வந்த பிரச்சனையைவிட சொந்தக் கட்சியால் ஏற்பட்ட நெருக்கடிகளே ஜாஸ்தி! எனினும் இருக்கும் ஆதரவாளர்களை வைத்து மிக திறமையாக ஆட்சியை நடத்த துவங்கினார். இந்த மாதிரியான சூழலில்தான் போன வருடம் 64-வது பிறந்த நாள் வந்தது. ஓபிஎஸ், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் செல்போனில் வாழ்த்து சொன்னார்கள். வேற விசேஷம் எதுவும் இல்லை!

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்நிலையில் நாளை 65 வயசு முடிந்து 66-வது வயதை தொடுகிறார் முதல்வர். போன முறை மாதிரியே இந்த வருடமும் ஒரு பக்கம் டிடிவி தினகரன், இன்னொரு பக்கம் ஸ்டாலின் அதிமுக அரசுக்கு எதிராக நிற்கிறார்கள். ஆட்சி கவிழ்ப்பு என்பதையும் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

எளிமையான முதல்வர்

எளிமையான முதல்வர்

இதைதவிர தேர்தல் முடிவுகள் எந்த மாதிரியான திருப்பத்தை தரப்போகிறதோ என்ற கலக்கமும் உள்ளது. அதனால் முதல்வர் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவாரா என என தெரியவில்லை. இருந்தாலும் அதிக ஆடம்பரம் இல்லாத எளிய முதல்வர் என்ற பெயரை பெற்றுவிட்டதே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி சிறப்பாக உள்ளது!

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஆனால் இதையெல்லாம் தாண்டி, மு.க.ஸ்டாலின் என்ற அசுர சக்தியையும், திமுக என்ற ஆலமரத்தின் தாக்கத்தையும் ஜஸ்ட் லைக் தட் சமாளித்து கரையேறியவர் என்ற பெயர் எடப்பாடிக்கு கிடைத்து விட்டது. என்னவென்னவோ செய்தும் யாராலும் எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை என்பது இன்னொரு சாதனையாகும். இப்படி ரணகளத்திலும் ஒரு கலகலப்பாக போய்க் கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி. வாழ்த்துவோம் முதல்வரை!

English summary
Chief Minister Edapadi Palanisamy 5th birthday in tomorrow. It seems that birthday will not be celebrated grandeur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X