சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசி நேர ட்விஸ்ட்.. எதிர்பார்த்தது போலவே செம்ம அறிவிப்பு.. சட்டசபையில் முதல்வர் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை பிற்பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கூடியது. எதிர்பார்த்து போலவே கடைசி நேர ட்விஸ்ட் ஆக மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க மசோதா சட்டசபையில் நிறைவேறி உள்ளது.

சட்டசபை தேர்தல் தேதி அடுத்த சில மணி நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அனேகமாக மாலை 4 மணிக்கு மேல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அராரோ, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதி மற்றும் வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு இறுதி செய்யும் நாள், வாக்கு எண்ணிக்கை எப்போது, எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்பது உள்ளிட்ட அறிவிப்பை வெளியிட உள்ளார்.

முதல்வர் திடீர் செய்தியாளர் சந்திப்பு.. வெளியாகப்போகும் அதிரடி சரவெடி அறிவிப்புகள்.. பரபரப்பு முதல்வர் திடீர் செய்தியாளர் சந்திப்பு.. வெளியாகப்போகும் அதிரடி சரவெடி அறிவிப்புகள்.. பரபரப்பு

விதி எண் 110

விதி எண் 110

எனவே தற்போதைய நிலையில் இன்னும் ஓரிரு மணி நேரத்திற்குள் மட்டுமே அரசால் புதிய அறிவிப்பை வெளியிட முடியும். அல்லது திட்டங்களை தொடங்க முடியும். அதற்கு மேல் முடியாது. அதுவும் சட்டசபையில் விதிஎண் 110ன் கீழ் அறிவித்தால் அந்த அறிவிப்பை எளிதாக செயல்படுத்த முடியும். எந்த ஒரு அறிவிப்பிற்கும் சட்டசபையில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் சட்டசபையில் அறிவிக்கும் அறிவிப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

நகை கடன் தள்ளுபடி

நகை கடன் தள்ளுபடி

இன்று காலை சட்டசபையில் முதல்வர் எடப்பாடியார், விதி எண் 110ன் கீழ் இரண்டு மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஏழை, எளிய மக்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் 6 சவரன் வரை வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

இதேபோல் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

எனவே முதல்வர் எடப்பாடியார், கடைசி நிமிட அறிவிப்பாக பிற்பகல் 3மணிக்கு கூடும் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் மேலும் புதிய அறிவிப்பு ஏதும் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்கிறது. மேலும் சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. இந்த மசோவை தாக்கல் செய்த முதல்வர் எடப்படியார், இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது தான். 6 மாதத்திற்கு பிறகு புதிய ஒதுக்கீடு தரப்படும் என்றார்.

English summary
The Tamil Nadu Assembly reconvenes at 3 p.m. There is an expectation that the Chief Minister edappadi palanisamy will announce any new announcement then.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X