சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி செய்தால் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ளும் முடிவை திரும்ப பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் 50 சதவீத மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டை கடந்த மூன்றாண்டுகளாக ஒதுக்கவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரித்து வருகின்றன.

chief minister edappadi palanisamy written letter to PM Modi over creamy layer obc

இதனிடையே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது. இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட தமிழகத்தைச் சேர்ந்தபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ளும் முடிவை திரும்ப பெற வேண்டும்.

kerala gold smuggling case: ஸ்வப்னாவால் சிக்கல்.. சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு பினராயி கடிதம்kerala gold smuggling case: ஸ்வப்னாவால் சிக்கல்.. சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு பினராயி கடிதம்

ஓ.பி.சி. பிரிவினருக்கு வருமானத்தை கணக்கிடும் போது பெற்றோர்களின் ஊதியம், விவசாய வருமானத்தை சேர்க்கக்கூடாது. பெற்றோர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஓ.பி.சி கிரமிலேயர் கணக்கிட வேண்டும். பெற்றோர்களின் வருமானம், விவசாய வருமானத்தை சேர்த்து கணக்கிட்டால் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும். ஆகையால் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு கிரிமிலேயர் வரம்பிற்கு புதிய சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். ஏற்கனவே இருக்கும் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.

ஓபிசி பிரிவினருக்கு தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறையை மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் தன் மூலமாக தான் சமூக நீதி காக்கப்படும் . மத்திய அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

English summary
chief minister edappadi palanisamy written letter to PM Modi over creamy layer obc income limit . he ask withdraw the new plan of creamy layer obc income limit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X